நிலாவில் விண்கலத்தை இறக்கி ஆய்வு நடத்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதன்படி ஜூலை 15 ம் தேதி அதிகாலை 2 மணி 15 நிமிடத்தில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள  சதிஷ் தவான் ஏவுகணை மையத்தில் இருந்து  ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏற்றப்படுகிறது.

ஜூலை 15 ம் தேதி விண்ணில் ஏற்றப்படும் இந்த ஏவுகணை செப்டம்பர் 6 ம் தேதி நிலவில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ராக்கெட்டை தயார் படுத்தும் பணிகள் அனைத்தும் இறுதி கட்டத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஏவுகணையின் பக்கங்கள் அனைத்தும் சரியாக இருக்கின்றனவா என்றும் ஆய்வு செய்யப்படுகிறது.

சந்திராயன் 2 லிருந்து பிரியும் விக்ரம் விண்கலம் நிலவில் தரை இறங்கும் அதன் பின், பிரக்யான் என்னும் மற்றொரு விண்கலம் நிலவின் தரை மட்டத்தில் அனைத்து இடங்களிலும் சென்று ஆய்வு நடத்தும். இந்த ஆய்வினை இதுவரை எந்த நாடும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here