ஏப்ரல் 01, 2018 முதல் மார்ச் 31, 2019 வரையான ஒரு வருட காலத்தில், வங்கியில் அல்லது அஞ்சலக அலுவலகங்களில் டெபாசிட் திட்டங்களில் டெபாசிட் செய்திருக்கும் தொகைக்கு ஒரு குறிப்பிட்ட பணம் வட்டியாக வரும்.

அப்படி வட்டியாக வரும் தொகைக்கும் வருமான வரி (Income Tax) செலுத்த வேண்டும். பெரும்பாலும், நமக்கு கிடைக்கும் வட்டித் தொகை ஒரு நிதி ஆண்டில் 10,000 ரூபாய்க்கு மேல் போகிறது என்றால், வங்கிகளே நம்முடைய வட்டியில் இருந்து டிடிஎஸ் – TDS – Tax Deductable at Source ஆக 10 சதவிகிதம் வரி பிடித்தம் செய்து வருமான வரித் துறையிடம் செலுத்தி விடுவார்கள்.

அதன் பின் நாம் தான் வருமான வரி தாக்கல் செய்யும் போது நாம் செலுத்த வேண்டிய வருமான வரிக்கு அதிகமாக செலுத்தி இருந்தால், ரீ ஃபண்டுக்கு (Refund)விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள வேண்டி இருக்கும்
வரியை குறைவாக செலுத்தி இருந்தால் கூடுதல் வரியைச் செலுத்த வேண்டி இருக்கும்.

மிக முக்கியமான விஷயம் ஃபிக்ஸட் டெபாசிட்களில் இருந்து வரும் வருமானமும் வருமான வரிகளுக்கு உட்பட்டதே. ஆகையால் உங்கள் ஃபிக்ஸட் டெபாசிட் வருமானத்துக்கும் வரி செலுத்தியாக வேண்டும். ஒருவேளை உங்கள் ஆண்டு வருமானம் (ஃபிக்ஸட் டெபாசிட்டில் இருந்து கிடைத்த வட்டியையும் சேர்த்து) வருமான வரி வரம்பிற்குள் இருந்தால் கூட, டிடிஎஸ் பிடித்தம் செய்திருந்தால். நாம் வருமான வரி தாக்கல் செய்து தான் ரீ ஃபண்ட் (Refund) வாங்க வேண்டி இருக்கும்.

உதாரணம்: கேத்தரீன் பெயரில் 5 லட்சம் ரூபாய் ஃபிக்ஸட் டெபாசிட் செய்திருக்கிறார்கள். அதற்கு கடந்த 2018 – 19 நிதி ஆண்டில் 40,000 ரூபாய் வட்டி வருமானம் வந்திருக்கிறது என வைத்துக் கொள்வோம்.

அ. இப்போது கேத்தரீனுக்கு இந்த வட்டி வருமானத்தையும் சேர்த்து 2.90 லட்சம் ரூபாய் வருகிறது என்றால் முறையாக வருமான வரி தாக்கல் செய்து கூடுதலாக செலுத்திய வரியை ரீஃபண்ட் செய்து கொள்ளலாம்.

ஆ. இதுவே கேத்தரீனுக்கு இந்த 40,000 ரூபாய் வட்டி வருமானத்தை சேர்த்தும் கூட 2.5 லட்சம் ரூபாயைத் தாண்டவில்லை என்றால், முறையாக வருமான வரி தாக்கல் செய்து பிடித்தம் செய்த மொத்த வரியையும் ரீ ஃபண்ட் விண்ணப்பித்து வாங்கிக் கொள்ளலாம்.

குறிப்பு: இதில் மற்ற வருமான வரி பிரிவுகளில் வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் வரிக் கழிவுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பதையும் வாசகர்கள் கவனிக்க வேண்டுகிறோம்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here