கல்வி ஆண்டு 2019 – 2020 க்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் , கலந்தாய்வுக்கான விதிமுறைகள் அடங்கிய அரசாணை எண் 217 , 218 நாள் 20.06.2019  மதிப்புமிகு பள்ளிக் கல்வி செயலர் அவர்கள் வழங்கி , அவை சார்ந்த நெறிமுறையினை மதிப்புமிகு பள்ளிக் கல்வி இயக்குநர், மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களும் வழங்கியுள்ள நிலையில் , உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கண்ட  அரசாணையில் குறிப்பிட்டுள்ள இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 ,தமிழ்நாடு அரசின் அரசாணை  எண் 231 நாள் 11.08.2010ன் படி ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்திற்கான அளவை பதிவேடு (Scale Register) முறையாக பராமரிப்பு செய்து மாவட்ட கல்வி அலுவலரிடமும் , மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடமும் ஒப்படைப்பு செய்து ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது.             📌📌📌தொடக்கக் கல்வி  –  வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆசிரியர் , மாணவர் விகிதாச்சாரத்திற்கான அளவை பதிவேட்டில் தொடக்கப் பள்ளியில்  குறைந்தபட்சம்  ஒரு தலைமை ஆசிரியர் ,நடுநிலைப் பள்ளியில் குறைந்த பட்சம் ஒரு தலைமை ஆசிரியர் என்று அரசாணையில் இல்லாத விதிமுறையினை உருவாக்கி தமிழகம் முழுவதும் உள்ள அரசு தொடக்க , நடுநிலைப் பள்ளியில் உபரியாக உள்ள  99 %  (35 , 0000 மேற்பட்ட )தலைமை ஆசிரியர்களை பாதுகாத்து , இடைநிலை ஆசிரியர்களும் , பட்டதாரி ஆசிரியர்களும் உபரியாக உள்ளதாக கணக்கீடு செய்து மாவட்டக் கல்வி அலுவலரிடம் கொடுத்து ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துகின்றனர். விதிகள் மீறப்படுவதால் அரசுக்கு     மக்களின் வரிப்பணம் ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்  விரையம்  ஏற்படுகிறது  என்று லஞ்சம் ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறைக்கு புகார் மனு வழங்கும் பட்சத்தில் , சில நேரம் ஊழல் தடுப்புத் துறை  புகார் மனுவை ஏற்காத நிலையில் மனுதார் உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலைப் பெற்று புகார் பதிவு செய்தால் என்ன நடக்கும்  தோழா ?

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here