தமிழக தடய அறிவியல் துறையில் காலியாக உள்ள இளநிலை அறிவியல் அதிகாரி (Junior Scientific Officer) பணியிடங்களை நிரப்புதவற்கான தேர்வை அறிவித்துள்ளது.

தமிழக அரசு தடய அறிவியல் துறையில் 64 இளநிலை அறிவியல் அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தக் காலிப் பணியிடங்களை நிரப்புவுதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது

இந்தப் பணியில் சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் – ஜூலை 22, 2019
(எஸ்பிஐ அல்லது ஹெச்டிஎப்சி வங்கி மூலம்) ஆன்லைனில் கட்டணம் செலுத்த கடைசி நாள் – ஜூலை 24, 2019

தேர்வு முறை மற்றும் தேதி:

இரண்டு தாள்களாக நடைபெறும் இத்தேர்வு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட உள்ளது. முதல் தாள் தேர்வு ஆகஸ்ட் 24ஆம் தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடக்கும். இரண்டாம் தாள் தேர்வு அதே நாளில் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணிக்கு முடியும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here