எம்ப்ளாயீஸ் பிரா விடண்ட் பண்டு ஆர்கனி சேஷன் என்பது இ.பி.எப்.ஓ., என அறியப்படுகிறது.

இதில் சோசியல் செக் யூரிடி அசிஸ்டென்ட் பிரிவில் 2189 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது: 21.7.2019 அடிப் படையில் விண்ணப்பதாரர் கள் 18 முதல் 27 வயது உடையவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

டேட்டா என்ட்ரி ஒர்க்கில் ஒரு மணி நேரத்தில் 5 ஆயிரம் எழுத்துக்களை டைப் செய்யும் திறன் தேவைப்படும்.

இதர தேவை: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக கம்ப்யூட்டர் டிரெய்னிங் சான்றிதழ் தேவைப்படும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்க: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் ரூ. 500.

கடைசி நாள்: 2019 ஜூலை 21.

விபரங்களுக்கு: https://ibpsonline.ibps.in/epfssaojun19/

அழைக்கிறது அணுமின் நிலையம்

பாபா அட்டாமிக் ரிசர்ச் சென்டர் எனப்படும் பார்க் நிறுவனம் மும்பையில் உள்ளது. ஸ்டைபண்டரி டிரெய்னி பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

காலியிட விபரம்: பிளான்ட் ஆப்பரேட்டரில் 7ம், லேபரட்டரி அசிஸ்டென்டில் 4ம், பிட்டரில் 12, வெல்டரில் 2ம், டர்னரில் 1, எலக்ட்ரீசியனில் 4, இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்கில் 8, எலக்ட்ரானிக் மெக்கானிக்கில் 4, ஏ.சி., மெக்கானிக்கில் 1ம் காலியிடங்கள் உள்ளன.

வயது: 7.8.2019 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 22 வயது உடையவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பில் தேர்ச்சியுடன் மேற்கண்ட டிரேடு பிரிவில் என்.டி.சி., அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் படிப்பு தேவை.

தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு, ஸ்கில் தேர்வு என்ற அடிப்படையில் இருக்கும்.

விண்ணப்பிக்க: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்: 7.8.2019

விபரங்களுக்கு: https://recruit.barc.gov.in/barcrecruit/main_page.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here