கொக்கோ அமெரிக்கப் பிராந்தியத்தின் அடர்த்தியான வெப்பமண்டலத்தை தாயகமாகக் கொண்டதுமாகும். இதனுடைய விதைகள் மூலம் தான் நாம் விரும்பி உண்ணும் கொக்கோத் தூளும் சாக்கலேட்டும் செய்யப்படுகின்றது.
கொக்கோ இலைகளில், வைட்டமின் ஏ, சி, ஈ, பி 2 மற்றும் பி 6 அதிகம் உள்ளது. 
கொக்கோ இலைகள் இரும்பு சத்து, ரிபோப்லவின் மற்றும் கல்சியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

கொக்கோ இலைகளில் ஊட்டச்சத்துகளுடன் வைடமின் ஏ இணைந்து இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகின்றது
கொக்கோ தேநீரில் உள்ள அல்கலைடு மற்றும் வைட்டமின்கள், அஜீரணத்திற்கு நல்ல தீர்வைத் தருகின்றன.
கொக்கோ தேநீர் நீரிழிவு அபாயத்தைக் குறைக்கவும், உடல் பருமனைப் போக்கவும் இந்த செயல்பாடு முக்கிய பங்காற்றுகிறது.
தற்போது இந்த அற்பு தேநீரை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

தயாரிக்கும் முறை
  • தேவையான பொருட்கள்:
  • ஒரு ஸ்பூன் கொக்கோ இலைகள்
  • ஒரு கப் தண்ணீர்
  • ஒரு ஸ்பூன் ஆர்கானிக் தேன் (இனிப்பு தேவைபட்டால்)
செய்முறை

முதலில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அடுப்பை சிம்மில் வைக்கவும். 
கொதிக்கும் நீரில் கொக்கோ இலைகளை சேர்க்கவும். அடுத்த 5 நிமிடங்கள் இந்த கலவை நன்றாக கொதிக்கட்டும். 
நீண்ட நேரம் கொதிக்க வைப்பதால் தேநீர் இன்னும் அடர்த்தியாக மாறும். இந்த கலவையை வடிகட்டி, தேன் சேர்த்து பருகவும். 
இந்த தேநீரை உங்கள் தினசரி உணவில் இணைத்துக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த தேநீர் பருகுவது நல்லது. 

 

முக்கிய குறிப்பு
  • கர்ப்பிணி பெண்கள் கொக்கோ தேநீர் உட்கொள்ள வேண்டாம்.
  • கொக்கோ சிலருக்கு உயர் இரத்த அழுத்தத்தை உண்டாக்கலாம்.
  • ஹைபர் டென்ஷன் உள்ளவர்கள் இந்த தேநீரை பருக வேண்டாம். வாதம் வரும் அபாயம் உள்ளவர்கள், ஏற்கனவே வாதம் பாதிக்கப்பட்டவர்கள், இந்த தேநீரை பருக வேண்டாம்.
  • ஆஸ்துமா நோயாளிகள் இந்த டீயை பருகாமல் தவிர்ப்பது நல்லது.
  • இதய நோய் உள்ளவர்களுக்கு கொக்கோ தேநீர் கொடுக்காமல் இருப்பது நல்லது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here