ராணுவ அதிகாரிகள், தங்களுக்கு அறிமுகமில்லாத நபர்கள் இருக்கும் ‘பேஸ்புக், வாட்ஸ் ஆப்’ போன்ற சமூகவலைதள குழுக்களில் இணைவதை தவிர்க்க வேண்டும்’ என, ராணுவ இயக்குனரகம் உத்தரவிட்டுஉள்ளது.

‘பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப்’ போன்ற சமூகவலைதளங்களை, ராணுவ அதிகாரிகள் பயன்படுத்தி வருகின்றனர்

. எதிரி நாடுகளை சேர்ந்த உளவாளிகள், இந்த சமூகவலைதளங்கள் வாயிலாக, நட்பாக பழகி, தகவல்களை திருடுவதாக தகவல் வெளியானது.

இதையடுத்து, ராணுவ இயக்குனரகம், சமீபத்தில், பிறப்பித்த உத்தரவு: அறிமுகம் இல்லாத நபர்கள் நடத்தும் அல்லது இடம் பெற்றுள்ள ‘பேஸ்புக், வாட்ஸ் ஆப்’ சமூக வலைதள குழுக்களில் இணைவதை, ராணுவ அதிகாரிகள் தவிர்க்க வேண்டும். சமூக வலைதளங்களில், புதிய நபர்களின் நட்பு அழைப்புகளை ஏற்க வேண்டாம்.

தனிப்பட்ட முறையில், சமூகவலைதளங்களில் இயங்குவதற்கு தடை இல்லை.பணியில் உள்ள ராணுவ அதிகாரிகள் இடம்பெற்றுள்ள, சமூக வலைதள குழுக்களில் இயங்க தடை இல்லை.

ஆனால், முன்னாள் ராணுவ அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட, முன் பின் அறிமுகமில்லாதவர்கள் இடம்பெற்றுள்ள குழுக்களில் இணைவதை தவிர்க்கவும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here