ஜாக்டோ – ஜியோ விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் சட்டசபையில் விவாதிக்க இயலாது” என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். 

சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:தி.மு.க. – தங்கம் தென்னரசு: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோவினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் முதல்வரின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை கைவிட்டனர்.ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட 1990 பேர் ‘சஸ்பெண்ட்’ செய்யப் பட்டுள்ளனர்; ஏராளமானோர் பணி இடமாறுதல் செய்யப் பட்டுள்ளனர்;
பலருக்கும் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசு பழிவாங்கும் போக்கை கைவிட வேண்டும். அவர்களை அழைத்து முதல்வர் பேச வேண்டும்.அமைச்சர் ஜெயகுமார்: ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் நடத்திய போராட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அது குறித்து சபையில் விவாதிக்க முடியாது.இவ்வாறு விவாதம் நடந்தது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here