உங்களுக்குத் தெரியுமா ஏன் நீங்கள் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் ஆகிறீர்கள் என்று. இதற்கு உங்களுடைய உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் சீரின்றி மிகவும் பலவீனமாக இருப்பது தான் முதல் காரணம்.

நம்முடைய முன்னோர்கள் நம்மைப் போல உணவை ருசிக்காகவும் அதனால் ஏற்படும் பிரச்சினைக்காக மருந்தையும் சாப்பிடவில்லை.

உணவையே மருந்தாக சாப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் நாம் உணவு எடுத்துக் கொள்ளும் அளவில் மருந்தையும் மருந்து சாப்பிடுகிற அளவில் உணவையும் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

அதனால் நம்முடைய முன்னோர்கள் வழியிலேயே நம்முடைய கிச்சனில் இருக்கிற ஒவ்வொரு பொருளுக்கும் என்னென்ன குணங்கள் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப அதைப் பயன்படுத்தி உங்களுடைய நோயைக் குணப்படுத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

குறிப்பாக நம்முடைய வீட்டில் உள்ள ஒரே ஒரு பொருள் மட்டுமே போதும் நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்தை பல மடங்கு வலுப்படுத்துவதற்கு.

மிளகு மட்டும் இருந்தாலே போதும் நம்மை பலமடங்கு வலுப்படுத்திக் கொள்ள முடியும். சுடுதண்ணீரில் சிறிதளவு மிளகைத் தூளைப் போட்டு கலந்து அதை வெறும் வயிற்றில் காலையில் குடித்தாலே போதும் உங்களுக்கு யானை பலம் உண்டாகிவிடும்.

நீர்ச்சத்து அதிகரிக்க

உடலில் உண்டாகின்ற பெரும்பான்மையான நோய்களுக்கும் அதே போல் சருமம் மற்றும் தலைமுடி பிரச்சினைக்கும் பிரச்சினைகள் உண்டாக நீர்ச்சத்து பற்றாக்குறை தான் காரணம்.

சுடுதண்ணீரில் மிளகைப் போட்டுக் குடித்து வந்தால் செல்கள் அனைத்தும் புத்துணர்ச்சி அடையும். உடலில் நீர்ச்சத்தும் அதிகரிக்கும். நீர்ச்சத்து பற்றாக்குறையால் உண்டாகும் பாதிப்பை தடுத்து செல்களை பாதுகாப்பாக வைத்திருக்க உதவி செய்யும்.

உடல் அசதி

சுடுதண்ணீரில் மிளகை போட்டு காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பசியின்மையைப் போக்கும். சரியாக உணவை சரியான நேரத்தில் சாப்பிட்டாலே முறையாகத் தூங்கி சரியான நேரத்தில் எழுந்திருக்க முடியும். இல்லையென்றால் உடல் அசதி உங்களைப் போட்டு அசத்தும். இதுபோன்ற பிரச்சினை உள்ளவர்கள் இந்த பானத்தை தினமும் காலையில் கட்டாயம் குடித்துப் பாருங்கள்.

சரும வறட்சி

வெந்நீரில் மிளகு சேர்த்து குடித்து வருவது சருமத்தில் உள்ள வறட்சியைப் போக்கி நீர்ச்சத்தினை அதிகரிக்கச் செய்யும். சருமத்தின் வறட்சி நீங்கி, உடலைப் புத்துணர்வோடும் சருமத்தை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கச் செய்யும்.

உடல் வலிமை

எப்போது நீங்கள் இந்த மேஜிக்கல் ட்ரிங்கை குடிக்க ஆரம்பிக்கிறீர்களோ அந்த நாள் முதலே உங்களுடைய உடல் வலிமை கூடிக்கொண்டே போவதை உணர ஆரம்பிப்பீர்கள். உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து உங்கள் உடல் வலிமையாக இருப்பதை உங்களை உணரச் செய்யும்.

எடை குறைய

உடல் எடையைக் குறைப்பதற்கு ஆண்களை விடவும் பெண்கள் அதிகமாக டயட் ஃபாலோ செய்கிறார்கள். அதேசமயம் அவர்கள் தான் அதிக சிரமப்படவும் செய்கிறார்கள். அதற்காக அவர்கள் நிச்சயம் ஒரு மார்னிங் ட்ரிங்கை முயற்சி செய்கிறார்கள்.

அதுபோன்று உடல் எடையை வேகமாகக் குறைக்க வேண்டும் என்று முயற்சியில் ஈடுபடுகிறவர்கள் மிக எறிதான இந்த மார்னிங் ட்ரிங்கை முயற்சி செய்யலாம்.

இது உடலின் மெட்டபாலிசத்தை சீராக்கி உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை எரிக்கச் செய்து நீங்கள் விருப்பப்படும் எடையை உங்களுக்குக் கொடுக்கிறது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here