நாம் அனைவரும் தலையணையோடு படுத்து பழகிவிட்டோம். தலையணை இல்லாமல் உறக்கம் வருவது என்பது சுலபம் அல்ல.

ஒரு சிலருக்கு தலையணை இல்லாமல் படுத்தால் உறக்கமே வராது. தலையணை
வைத்துப் படுப்பதால் சில உடல்நல உபாதைகள் ஏற்படுகின்றன என்று கூறப்படுகின்றது.

தலையணை இல்லாமல் உறங்குவதால் தண்டுவட பிரச்சனை, உடல் வலி போன்றவை ஏற்படாது.

.* தலையணை இல்லாமல் உறங்குவதால் தோள்பட்டை மற்றும் கழுத்து வலி உண்டாகாமல் தடுக்க முடியும்.

* தலையணை பயன்படுத்தாமல் உறங்கினால் முகத்தில் சுருக்கங்கள் அதிகமாகாது என கூறப்படுகிறது.

* தலையணை இல்லாமல் படுத்து உறங்குவதால் உடலின் எலும்பு நிலைகளை சீராக்க முடியும்.

* மெல்லிய தலையணை நேராக படுத்து உறங்கும் பழக்கம் உடையவர்களுக்கு  சிறந்தது.

* அடர்த்தியான தலையணை ஒருபக்கமாக படுத்து உறங்கும் நபர்களுக்கு சிறந்தது.

* தட்டையான தலையணைகள் குப்புறப்படுத்து உறங்கும் நபர்களுக்கு சிறந்தது.

* கழுத்து வலி, முதுகு வலி, உடம்பு வலி பிரச்சனையை தவிர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள், தலையணை இல்லாமல் படுத்த பழகிக் கொள்ள வேண்டும். இதுவே சிறந்த முறையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here