கடந்த பிப்ரவரி 1-ம் தேதி அப்போதைய தற்காலிக நிதியமைச்சராக செயல்பட்ட பியூஸ் கோயல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதாவது இந்த 2019-ம் ஆண்டின் முதல் 4 மாதங்களுக்கு மட்டும்.

use

இன்று தாக்கல் செய்யப்பட்ட ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் :

1. அறிக்கையின் படி 7-8 சதவீத வளர்ச்சியை நோக்கிய பாதையா வரும் ஆண்டு இருக்கும் என்ற திட்டத்துடன் பொருளாதார ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

2. வங்கி வாரக்கடன் தொகை தொடர் சீர்திருத்தங்களால் குறைக்கப்பட்டுள்ளது.

3. தேர்தல் நடவடிக்கை காரணமாக இந்தாண்டு ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் பொருளாதார நடவடிக்கையில் தேக்கம் அடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image result for budget

என்ன எதிர்பார்க்கலாம் :

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டவுடனே வருமான வரித்துறையின் என்னென்ன எதிர்பார்க்கலாம் என்பதே அனைவரது எதிர்பார்பாக இருக்கும். அதன்படி,

1. நடுத்தர மக்களுக்கு, வருமான வரியில் சலுகை; தொழில் துறையினருக்கான, தொழில் வரியில் சலுகை என, அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் அறிவிப்புகள் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

2. வருமான வரி வரம்பு உயர்வு – பொதுவாக வருமான வரி வரம்பை 2.5 லட்சத்தில் இருந்து நேரடியாக 5 லட்சம் ரூபாய்க்கு உயர்த்தச் சொல்லித் தான் கேட்பார்கள். ஆனால் ப்ளூம்பர்க் உட்பட பல அனலிஸ்டுகள் 2.5 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர்த்த வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். இதனால் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கு 2,500 ரூபாயாவது மிச்சமாகும் என்கிறார்கள்.

Image result for unemployment

3. வேலை வாய்ப்பு திண்டாட்டம் ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது போல மின்வளத்துறைக்கு தனியாக ஒரு அமைச்சகம் உருவாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5. விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களுக்கு அதிக பட்ஜெட் ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6. ஜல்சக்தி திட்டத்திற்கு அமைச்சகத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here