உலகம் முழுவதும் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் படங்களை பார்க்க முடியாத பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர். ட்விட்டரிலும் தங்கள் பிரச்னையை சுட்டிக்காட்டி ஒருவருக்கொருவர் விசாரித்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் நொடிக்கு நொடி ஆயிரக்கணக்கான கோடி பேர் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்வற்றை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சமூக வலை தளங்கள் ஒரு நிமிடம் வேலை செய்யவில்லை என்றால் கூட உலகமே ஸ்தம்பித்துவிடும்.
அந்த அளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்றவை இரண்டற கலந்துவிட்டன.
இந்நிலையில் உலகம் முழுவதும் பல நாடுகளில் சமூகவலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், உள்ளிட்ட பல தளங்களில் சரியாக இயக்கமாமல் பிரச்னைகளை சந்தித்து வருகிறது.
பேஸ்புக், இஸ்டாகிராம், வாட்ஸ் அப், மற்றும் பேஸ்புக்கின் அக்குலஸ் விஆர் போன்ற தளங்களில் இந்த பிரச்சனை தற்போது நிலவி வருகிறது. புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை பதிவிறக்கம் செய்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here