கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஒன்றியம்.
ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி, எம்.ஜி.ஆர்.நகர்.

கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஒன்றியம், எம்.ஜி.ஆர். நகர், ஊ.ஒ.நடுநிலைப்பள்ளியில் 14-ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை மற்றும் கல்வி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர்.

இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் இருளர் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆரம்பகாலத்தில் மாணவர்களை பள்ளிக்கு அழைக்க தொடங்கப்பட்ட இந் நிகழ்வு இன்று ஊர் கல்வித் திருவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. 42 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட (2003-ல்) இப்பள்ளியானது இன்று 8 ஆசிரியர்களைக்கொண்டு 180 மாணவர்கள் படிக்கும் பள்ளியாக மாறியிருக்கிறது. பாம்பு பிடித்தல், எலி பிடித்தல் தொழிலை செய்துவரும் இக் குழந்தைகளின் பெற்றோர், இன்றும் அத்தொழிலுடன் கழிவறை சுகாதாரப்பணி, மதுப்பாட்டில்கள் பொறுக்கி விற்றல், பேரூராட்சி துப்புரவுப்பணியாளர்களாக உள்ளனர்.
இப்பள்ளி, இங்கு தொடங்கி 15 ஆண்டுகள் கடந்த நிலையில் பொறியாளர்களாகவும், கலைக் கல்லூரிகளிலும் கல்வி பயில தொடங்கியுள்ளனர்.
பள்ளியின் பல்வேறு செயல்பாடுகள் மூலம் இச்சமுதாயம் மாற்றம் அடைந்துள்ளது.

இன்றைய விழாவில்,
சிங்கப்பூர் வாழ் தமிழர் இணையர் திரு. கோபாலகிருஷ்ணன், திருமதி. வசந்தகுமாரி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ரூ. 1.00 லட்சம் செலவில் புத்தாடைகள் வாங்கிக்கொடுத்தனர். மேலும், பள்ளிக்கு ரூ. 30,000/- செலவில் Projector –ம், ரூ. 15,000/- க்கு விளையாட்டுப் பொருள்களும் ஆகமொத்தம் சுமார் ரூ. 1.50 லட்சம் செலவு செய்தனர்.
மாணவர்களின் மேன்மையான கல்வி வளர்ச்சிக்கு இவர்களின் தொண்டு சிறப்பானதாக அமைந்தது.
மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர்கள், அண்டை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இப்பள்ளியின் வளர்ச்சிக்கு பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களின் கடின உழைப்பே காரணமாகிறது.
சி.குமாரவேல்,
தலைமையாசிரியர்,
9443497626.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here