*💢🔴🔴🔴💢பள்ளி மேலாண்மை குழுவில் 50 சதவீத பெண்கள்: கல்வித்துறை உத்தரவு*

*⭕⭕அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மேலாண்மை குழு அமைக்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.*

*⭕⭕ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட செயல்பாடுகளை கண்காணிக்க, மாநில, மாவட்டம், பள்ளி அளவில், மேலாண்மை குழுக்கள் அமைக்கப்படுவது வழக்கம்.*

*⭕⭕பள்ளிக்கு தேவையான குறுகிய, நீண்ட கால ஆண்டு திட்டங்களை தயாரித்து செயல்படுத்துவதற்காக, வழிமுறைகளை விவாதித்து, முடிவெடுப்பது இக்குழுவின் முக்கிய நோக்கம்.*

*⭕⭕பெரும்பாலான பள்ளிகளில் இக்குழு முறையாக இயங்குவதில்லை.*

*⭕⭕உறுப்பினர்கள் நியமிக்கப்படாததால், பள்ளிக்கு தேவையான திட்டங்கள் சரிவர செயல்படுத்த முடியாமல், கல்வித்தரம் வெகுவாக பாதித்துள்ளது.*

*⭕⭕இதனால், நடப்பாண்டு துவக்கத்திலேயே பள்ளிகள் தோறும் மேலாண்மை குழு அமைப்பதை உறுதிப்படுத்த, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.*

*⭕⭕தலைவராக, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் ஒருவர், துணை தலைவராக, மாற்றுத்திறன் கொண்ட குழந்தையின் பெற்றோர் ஒருவர், பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர் ஒருவர், பிற்படுத்தப்பட்ட குழந்தையின் பெற்றோர் – 12 பேர், உள்ளூர் அதிகார மையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக இருவர், கல்வியாளர் அல்லது தன்னார்வலர் அல்லது ஓய்வு பெற்ற அலுவலரில் யாரேனும் ஒருவர், சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவர் என, 20 பேர் இடம் பெற்றிருக்க வேண்டும்.*

*⭕⭕இதில், 50 சதவீதம் பெண்கள் கட்டாயமாக இருக்க வேண்டும்; மாதந்தோறும் கடைசி வெள்ளி கூட்டம் நடத்தி, குழு செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.*

*⭕⭕மேலும், ஒன்று முதல் பிளஸ் 2 வரை, குழந்தைகளின் கற்றல் அடைவு திறனை கண்டறிந்து, அதை மேம்படுத்த திட்டங்களை தயார் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.*

 

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here