நம் தலைமுறையில், பள்ளிக்குச் செல்லும் போது, கருப்பலகையை அழிப்பதற்கு கோவை இலைகளை வேலி ஓரங்களில் தேடித் தேடிப் பறித்திருப்போம். அப்படிப் இலைகளைப் பறிக்கும் போது உயரத்தில் இருக்கும் கோவைப் பழத்தை, கொடியை கீழே இழுத்து பறித்து சாப்பிட்ட ருசி இப்போதைய குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை.அவர்கள் பார்த்து வளருகிற கோவைக்காய்கள் எல்லாம் ஸ்பென்சர்ஸ்லேயோ, 

பழமுதிர் நிலையங்களிலோ இருப்பவை தான். கிராமங்களிலும் கூட கோவையிலைகளைப் பார்க்கமுடிவதில்லை.தானாகவே வேலியோரங்களிலும், புதர்களிலும் வளருகின்ற கோவைக்காயில் இருக்கும் மருத்துவ குணங்களைப் பட்டியலிட்டால், விவரம் தெரியாத வயசில் நாம் சாப்பிட்ட நினைவுகள் மனசுக்குள் வந்து போகும்.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் கோவைக்காய்க்கு நிகரான காய் வேறில்லை. இயல்பாகவே கோவைக்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.கோவைக்காயின் வேர், தண்டு, காய்,பழம், இலை என்று அனைத்துப் பாகங்களுமே பயன் தருபவை.
வாரத்திற்கு இருமுறை கோவைக்காயை உணவில் சேர்க்கலாம். சமைக்காமலேயே கூட பச்சையாக சாப்பிடலாம். சமைக்காமல், கோவைக்காயை நன்றாக கழுவி சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகிவிடும்.  அப்படி சாப்பிடமுடியாதவர்கள், கோவைக்காயை  பச்சையாக அரைத்து மோருடன் கலந்து குடித்தாலும் நல்ல பலன் பெறலாம். 

diabetes

கோவைக்காயின் இலைகள் நெஞ்சு சளி மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மேலும் விஷக்கடிக்கு இதன் இலைகளை அரைத்து கட்ட புண்கள் விரைவில் சரியாகும். தோல்                    நோய்களுக்கும் கரைகண்ட மருந்தாக கோவைக்காயின் இலைகள் பயன்படுத்தப்படுகிறது.கோவைப்பழம் பித்தம், காமாலை ,வாந்தி, வாயுபிடிப்பு போன்ற நோய்களுக்கு அருமருந்தாக பயன்படுகிறது.

‘எங்க அப்பாவுக்கு சுகர் இருக்கு. அதனால எனக்கும் சுகர் வந்துரும்’ என்று பயப்படும் பரம்பரை சர்க்கரை நோயாளிகள் ஆரம்பம் முதலே கோவைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நீரிழிவிலிருந்து நிரந்தரமாக நம்மைக் காத்துக் கொள்ளலாம்.

kovaikkai

கோவைக்காயில் இரும்புச் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் இரத்தசோகையை அகற்றுவதோடு, உடலுக்கு சுறுசுறுப்பையும், புத்துணர்ச்சியையும் தரும்.கோவைக்காயை நன்றாக சுத்தப்படுத்தி, அரிந்து சீரகப்பொடி, மிளகுப்பொடி, சிறிதளவு இஞ்சி, தயிர் சேர்த்து பச்சடியாகவும் சாப்பிடலாம். இப்படி சாப்பிடுவதால் அல்சரால் வரும் வயிற்றுப் புண்களையும் குணப்படுத்தும்.இனிப்பு, புளிப்பு, கசப்பு மூன்று சுவைகளையும்  ஒரு சேர இருப்பதால் அடிக்கடி கோவைக்காயை உணவில் சேர்த்து ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here