பணி நிறைவு பெற்ற புதுக்கோட்டை முன்னால் முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா. புதுக்கோட்டை மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு வாழ்த்து.


புதுக்கோட்டை,ஜூலை.1: புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக பணியாற்றியவர் இரா.வனஜா. இவர் 30-06-2019(ஞாயிற்றுக்கிழமை) அன்று வயது முதிர்வின் காரணமாக பணி ஓய்வு பெற்றார். அதனைத்தொடர்ந்து பணி நிறைவு பெற்ற இரா.வனஜா அவர்களுக்கு புதுக்கோட்டை மீனா திருமண மஹாலில் நேற்று பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பழனிவேலு வரவேற்று பேசினார். அதனைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்களின் தந்தையான புதுக்கோட்டை மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் இரா.சின்னத்தம்பி, புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் ராகவன்,புதுக்கோட்டை மாவட்ட கல்வித்தொலைக்காட்சியின் குழுத்தலைவர் இரா.சிவகுமார், ஆர்.எம்.எஸ்.ஏ முன்னால் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராசி.பன்னீர்செல்வம் ஆகியோர் பணி நிறைவு பெற்ற இரா.வனஜா அவர்களை வாழ்த்தி பேசி பொன்னாடை அணிவித்து பாராட்டி பேசினார்கள்.

இந்த நிகழ்வில் இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர்(பொ)எஸ்.ராஜேந்திரன், மதர்தெரசா கல்வி நிறுவனங்களின் தாளாளர் இரா.சி.உதயகுமார், வெங்கடேஸ்வரா மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் கவிஞர். தங்கம் மூர்த்தி மற்றும் தலைமையாசிரியர்கள்,கல்வியாளர்கள்,பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பணி நிறைவு பெற்ற வனஜா அவர்களை பாராட்டி வாழ்த்தினார்கள்..

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here