தேர்வே எழுதாதவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் – சர்ச்சையில் காமராசர் பல்கலைக்கழகம்!

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வித்துறையில் பணம் பெற்றுக்கொண்டு மோசடியாக மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைப் பற்றி நம்மிடம் பேசிய பல்கலைக்கழக அலுவலர்கள், “மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தொலைதூர கல்வி இயக்குநரகத்தில் 2014 முதல் 2016 வரை இந்த மோசடி நடந்துள்ளது. அப்போது இங்கு இயக்குநராக இருந்தவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட துணைவேந்தர் செல்லத்துரை. அவருடன் ராஜராஜன் உட்பட சிலர் இத்துறையில் இருந்தார்கள். கல்யாணி மதிவாணன் அப்போது துணைவேந்தராக பொறுப்பு வகித்தார். இந்தக் காலகட்டத்தில்தான் தேர்வே எழுதாத, உரிய தகுதி இல்லாத 500 பேருக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.
இச்சான்றிதழ் பெற்றவர்களின் முழுமையான விவரங்கள் இங்கு இல்லை. இதனால், பாதிக்கப்பட்ட மாணவர்கள் விஜிலென்ஸ்க்கு புகார் அனுப்பியுள்ளனர். 50,000 முதல் 2 லட்சம் வரை சான்றிதழுக்கு தகுந்தாற்போல பணம் வசூல் செய்திருக்கிறார்கள்” என்றனர். ஊழல் கண்காணிப்புக் குழுவினர் இந்த விவகாரத்தை வழக்காகப் பதிவு செய்துள்ளனர்.
அவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் வந்து விசாரிக்க, சிண்டிகேட் அனுமதி அளிக்க வேண்டும். சிண்டிகேட்டை உடனே கூட்ட தற்போதைய துணைவேந்தர் டாக்டர் கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். விஜிலென்ஸ் விசாரணை தொடங்கும்போது பல்கலைக்கழகத்தில் நடந்த இன்னும் பல மோசடிகள் தெரியவரும் என்கிறார்கள். இதனால் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் பரபரத்துக் கிடக்கிறது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here