மதுரை: பல்கலை மானியக் குழு விதிப்படியே அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பல்கலை மானியக் குழு விதிப்படியே அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் நியமனம் நடைபெறுவதை உயர்கல்விச் செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
உத்தரவை மீறும் அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும், யுஜிசி விதிப்படியே அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் நியமனம் நடைபெறுவதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றக் கிளை இன்று பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் நியமனம் யுஜிசி விதிமுறைகளின் படி நடைபெற உத்தரவிடக் கோரி ராஜேஷ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here