இதய நோய் வருவதற்கு கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை அன்றாடம் அதிகமாக சாப்பிடுவதுடன், உடலுழைப்பு இல்லாத வாழ்க்கையை வாழ்வது தான்.

இரத்த குழாயில் அடைப்பு ஏற்பட காரணம்
  • இதயம் மற்றும் மூளைக்கு தேவையான ரத்தம் மற்றும் சத்துக்களை எடுத்து செல்லும் ரத்த நாளங்கள் சுருங்கி விரியும் தன்மை உடையது.
  • இதயத்தை போன்றே சுருங்கி விரியும் ரத்தக் குழாய்களுக்கு நைட்ரிக் ஆக்சைடு என்ற ரசாயன பொருள் உதவுகிறது.
  • நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தி குறையும்போது ரத்த குழாய் சுருங்கி விரிவது குறையும். அப்பொழுது ரத்த குழாய்களில் கொழுப்பு படிய தொடங்கும். கொழுப்பு சேர்ந்து குழாயை அடைத்துவிடும். இதனால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்பட காரணமாகிறது.
  • இந்தக் காரணத்தினால் தான் ரத்தக் குழாயில் கொழுப்பு படிந்து, ரத்தக் குழாய் அடைப்பு, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
தடுப்பது எப்படி?
தேவையான பொருட்கள்
  • எலுமிச்சை
  • இஞ்சி
  • பூண்டு
  • ஆப்பிள் சீடர் வினிகர்
செய்முறை
  • 1 கப் எலுமிச்சைச் சாறு, 1 கப் இஞ்சி சாறு, 1 கப் பூண்டு சாறு மற்றும் 1 கப் ஆப்பிள் சீடர் வினிகர் ஆகிய அனைத்தையும் சம அளவு கலந்து, 60 நிமிடம் வரை இளஞ்சூட்டில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
  • பின் அந்த பானம் ஆறியதும் இயற்கையான தேன் கலந்து குடிக்க வேண்டும். இந்த இயற்கையான பானத்தை நாள் தோறும் காலை உணவுக்கு முன் 1 டீஸ்பூன் அளவு குடித்து வர வேண்டும்.
  • இதனால் ரத்தக் குழாய் அடைப்பு தடுக்கப்பட்டு, பைபாஸ் என்ற ரத்தக் குழாய் அடைப்பு அறுவை சிகிச்சையில் இருந்து விடுபடலாம்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here