காலை 9 மணிக்கு பணிக்கு வராத அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று, உத்தரபிரதேச முதல்வர் ஆதித்ய நாத் உத்தரவிட்டுள்ளதால், அரசு ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜ தலைமையிலான முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான ஆட்சியில், அவ்வப்போது அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

இருந்தாலும் அம்மாநிலத்தில் பாலியல் மற்றும் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் பிற மதத்தினரிடம் வன்முறையில் ஈடுபடுவதும் நடந்து வருகிறது.

இதனால், பல்வேறு தரப்பினரின் கண்டனத்துக்கும் ஆதித்ய நாத் அரசு ஆளாவது வாடிக்கை.

இந்நிலையில், மாநில முதல்வர் ஆதித்யநாத் ஒரு அறிவிப்பை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்

அந்த அறிவிப்பில் அரசு அதிகாரிகள் சரியாக காலை 9 மணிக்கு தங்களது அலுவலகத்திற்கு வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அப்படி அரசு அதிகாரிகள் சரியான நேரத்திற்கு தங்களது வேலைக்கு வரவில்லை அவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.

அதே போல் மாவட்டத்தின் கலெக்டர், காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் சரியாக காலை 9 மணியில் இருந்து 11 மணி வரை மக்களை சந்திக்க வேண்டும் என்று அவர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கு அதிகாரிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மாலை எப்போது நாங்கள் வீட்டுக்கு செல்லலாம்’ என்பதையும் அரசு அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரி ஒருவர் பேசுகையில், ‘நேற்று இரவு சாலை விபத்து காரணமாக அதிகாலை 4 மணிக்குதான் வீட்டுக்கு சென்றேன்.

அப்படியிருக்கையில் காலை 9 மணிக்கு எப்படி அலுவலகம் செல்ல முடியும்? நாங்கள் இப்போது ஒருநாள் முழுவதும் வேலை பார்ப்பது போல்தான் உள்ளது’ என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here