தண்ணீர் அவசியத்தை வலியுறுத்தி
மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

அரங்கல்துருகம் ஊராட்சியில் தண்ணீர் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் சென்ற மாணவ,மாணவிகள்.
ஆம்பூர் அருகே தண்ணீர் அவசி யத்தை வலியுறுத்தி அரசுப் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.

தமிழகத்தில் பல்வேறு மாவட் டங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதைத் தீர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், தண்ணீரை சிக்கனமாக பயன் படுத்த வேண்டும், தண்ணீரை சேமித்து வைக்க போதுமான நடவ டிக்கைகளை பொதுமக்கள் மேற் கொள்ள வேண்டும் என அரசு சார் பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ஆம்பூரைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள் தண்ணீரின் அவசி யத்தை பொதுமக்கள் உணர வேண் டும் என்பதற்காக விழிப்புணர்வு ஊர்வலத்தை நேற்று நடத்தினர்.

ஆம்பூர் அடுத்த அரங்கல்துரு கம் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் தண்ணீர் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை நேற்று பள்ளி வளாகத்தில் தொடங்கினர்.

பள்ளித் தலைமை ஆசிரியர் சுகுமார் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். அரசுப்பள்ளி வளாகத் தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்ற மாணவர்கள், கிடைக்கின்ற தண்ணீரை பொதுமக்கள் சிக்கன மாக பயன்படுத்த வேண்டும்.

மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு களை வீடு தோறும் உருவாக்க வேண்டும், குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருவதை கண்டால் உடனடியாக ஊராட்சி அலுவலர்கள் அல்லது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

எதிர்காலத்தில் பருவமழை கைகொடுக்க வீடு தோறும் மரம் வளர்க்க பொதுமக்கள் முன்வர வேண்டும். மழை நீரை முறையாக சேமித்தால் எந்த வறட்சியையும் நம்மால் சமாளிக்க முடியும் என் பதை பொதுமக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்ற கோஷங் களை எழுப்பியவாறு சென்றனர்.

இதில் பள்ளி ஆசிரியர்களான தண்டபாணி, ரமேஷ், கார்த்தி கேயன், தமிழ்செல்வி, கனகா, அபி நயா, ஜானகி, மீனாட்சி, ஜெயந் தா, எழிலன், உடற்கல்வி ஆசிரியர் குணசேகரன், கணினி ஆசிரியர் முத்துகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here