சென்னை, இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் மூன்று நாட்களில் 1348 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இன்ஜினியரிங் கவுன்சிலிங் ஜூன் 25ல் துவங்கியது. நேற்று விளையாட்டு பிரிவில் 330 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. மாற்று திறனாளிகளுக்கு 101; ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 121 இடங்கள் ஒதுக்கப்பட்டன. மூன்று நாட்களில் சிறப்பு பிரிவில் மட்டும் 552 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.நேற்று முன்தினம் முதல் தொழிற்கல்வி கவுன்சிலிங்கும் துவங்கியுள்ளது. முதல் நாளில் 436 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இரண்டாம் நாளான நேற்று 477 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் 375 பேர் பங்கேற்றதில் 360 பேர் மட்டும் இடங்களை தேர்வு செய்தனர். இரண்டு நாட்களிலும் தொழிற்கல்வியில் மட்டும் 796 பேர் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்துள்ளனர். சிறப்பு பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவில் மூன்று நாட்களில் மொத்தமாக 1348 இடங்கள் நிரம்பியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here