10,11-ம் வகுப்பு பாடங்களில்இருந்து அய்யாவைகுண்டர் குறித்தசர்ச்சைக்குரிய வரிகளைநீக்க அனைத்து மாவட்டமுதன்மைக் கல்விஅலுவலர்களுக்கும்பள்ளிக்கல்வித்துறைஉத்தரவிட்டுள்ளது.

அரசுப் பள்ளிபாடநூல்களில் அய்யா வைகுண்டர் குறித்து,தவறாகசித்தரிக்கப்பட்டுள்ளதைதிருத்தம் செய்யவலியுறுத்தி தொடர்போராட்டங்களில் ஈடுபடபோவதாக அய்யாவழியினர்அறிவித்துள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டம்நாகர்கோவிலில் உள்ளமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுஅளித்த அய்யா வழியினர்,பின்னர் செய்தியாளர்களைசந்தித்தனர். அப்போது,பத்தாம் வகுப்பு சமூகஅறிவியல் பாடப்புத்தகம்மற்றும் மேல்நிலைமுதலாம் ஆண்டு வரலாறுபாடநூலில் அய்யாவைகுண்ட சுவாமியை மனிதனாக, போராளியாக,புரட்சியாளராககுறிப்பிட்டுள்ளதாககூறினர். பாடநூலில்வைகுண்டர் எனகுறிப்பிட்டு போலி படத்தைபதிவிட்டுள்ளதாகவும்அய்யா வழியினர் குறைகூறினர். மேலும், அய்யாவைகுண்டர் பற்றியதவறான பதிவை திருத்தாவிட்டால்,சென்னையில் வரும் 30-ம்தேதி போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் அய்யா வழிஅன்பவர்கள்தெரிவித்தனர்

இந்நிலையில், தமிழகஅரசின் புதிய பாடபுத்தகங்களில்இடம்பெற்றுள்ளசர்ச்சைக்குரிய பகுதிகளைநீக்க அனைத்து மாவட்டமுதன்மைக் கல்விஅலுவலர்களுக்கும்பள்ளிக்கல்வித்துறைஉத்தரவு ஒன்றைபிறப்பித்துள்ளது. அதில், 10,11-ம்  வகுப்பு பாடங்களில்இருந்து அய்யாவைகுண்டர் குறித்தசர்ச்சைக்குரிய வரிகள்மற்றும் படங்களை நீக்கஉத்தரவிட்டுள்ளது. மேலும், 7-ம் வகுப்பு சமூகஅறிவியல் புத்தகத்தில்இந்தியாவின் ஆட்சி மொழிஇந்தி என்ற வரியைநீக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 இந்தியாவின் அலுவல்மொழி இந்தி, இந்தி பேசாதமாநிலங்களில் இணைப்புமொழியாக ஆங்கிலம்இருக்கும் என சேர்க்கஆணையிடப்பட்டுள்ளது. 7-ம் வகுப்பு தமிழ்ப்பாடத்தில்,முத்துராமலிங்கத்தேவர்குறித்து  இடம்பெற்றசர்ச்சைக்குரிய வரியைநீக்கவும்உத்தரவிடப்பட்டுள்ளது.சுதந்திரத்துக்கு பின்இஸ்லாமிய தலைவர்கள்,முஸ்லீம் ஆட்சியைநிறுவமுயன்றனர் போன்றபகுதிகளையும் நீக்கஉத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here