தமிழகம் முழுவதும், அனைத்து அரசு அலுவலகங்களிலும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் முறைப்படுத்தப்பட வேண்டும்’ என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போது, நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு, அதிகளவில் ஏற்படுத்தப்படுகிறது.அரசு அலுவலகங்களில் கூட, மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் முறையாக கட்டப்படவில்லை அல்லது பராமரிக்கப்படவில்லை.சமீபத்தில், நிலத்தடி நீர் மேம்பாடு தொடர்பாக, ஆய்வு மேற்கொண்டபோது, ‘அரசு அலுவலகங்களில், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை முறைப்படுத்த வேண்டும்’ என, அதிகாரிகளுக்கு, முதல்வர், இ.பி.எஸ், அறிவுறுத்தினார்.
இதன்படி, அதிகாரிகள், அரசு அலுவலகங்களில், ஆய்வு நடத்தி வருகின்றனர். அரசு அலுவலகங்களில், குழி தோண்டி, கூழாங்கற்கள், மணல் உள்ளிட்டவற்றை நிரப்பி, மழைநீர் சேகரிக்கப்படுகிறதா, கட்டடங்களின் மேல் தளத்தில் விழும் மழைநீர் சேமிக்கப்படுகிறதா என, ஆய்வு நடக்கிறது.’இந்தக் கட்டமைப்புகள்இல்லா விட்டால், அவற்றை முறைப்படி மேற்கொள்ள வேண்டும். முதலில், கலெக்டர் அலுவலகங்களில் இதை முறைப்படுத்தி, படிப்படியாக, அனைத்து அரசு அலுவலகங்களிலும், மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.’தனியார் கட்டட உரிமையாளர்களுக்கும், இதற்கான அறிவுறுத்தல் வழங்க வேண்டும். குறிப்பாக, தண்ணீர் இல்லாத கிணறுகளை, மழைநீர் சேகரிப்புத் தொட்டியாக பயன்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, அதிகாரிகளுக்கு, அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here