மருத்துவ மாணவர் சேர்க்கையில் பொது பிரிவினருக்கான 10% இடஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை: அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்த தமிழக அரசு முடிவு

தமிழகத்தில் இந்த ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கையில் பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல் படுத்துவதற்கான சாத்தியக்கூறு கள் இல்லை.

அடுத்த ஆண்டில்இருந்து இதை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடுக்கு மத் திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதனைத் தொடர்ந்து, 10 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதற்கான சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்நிலை யில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாண வர் சேர்க்கையில் 10 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆண்டு அமல்படுத்துமாறும் தேவைக் கேற்ப இடங்களை அதிகரித்துக் கொள்ளுமாறும் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைனில் பதிவு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்களுக்கான மாணவர் சேர்க் கைக்கான கலந்தாய்வுக்கு ஆன் லைனில் பதிவு செய்வது கடந்த 19-ம் தேதி தொடங்கியது. நீட் தேர்வில் தகுதிபெற்ற மாணவ,மாணவிகள் www.mcc.nic.in என்ற இணையதளத்தில் ஆர்வமாக விண்ணப்பித்து வரு கின்றனர். மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) நடத்தும் இந்த கலந்தாய்வில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவின ருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்பட உள்ளது.

59,756 விண்ணப்பங்கள்

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 34,368 விண்ணப்பங்கள், தனியார் மருத் துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,388 விண்ணப்பங்கள் என மொத்தம் 59,756 விண்ணப்பங்கள் சமர்ப் பிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங் கள் பரிசீலனைசெய்யப்பட்டுதகுதியான மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 2-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. முதல் கட்ட மாணவர் சேர்க் கைக்கான கலந்தாய்வு ஜூலை 4-ம் தேதி தொடங்குகிறது. ஆனால், தமிழகத்தில் இந்த ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக் கான மாணவர் சேர்க்கையில் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து இதுவரை தமிழக அரசு எந்த ஒரு அறிவிப்பையும் வெளி யிடவில்லை.

தமிழகத்தில் ஏற்கெனவே எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் 69 சதவீத இடஒதுக்கீடு பின் பற்றப்படுகிறது. மீதமுள்ள 31 சதவீத இடங்கள் பொதுப் பிரிவில் உள்ளன. இதற்கிடையில், பொரு ளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு எப்படி அமல்படுத்தப்பட உள்ளது என்று கடந்த சில வாரங்களாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, 10 சதவீத இடஒதுக்கீடு விஷயத்தில் தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்கும் என்ற பதிலை மட்டும் தெரிவித்து வந்தார்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “மருத்துவப் படிப்பு மாண வர் சேர்க்கையில் பொருளா தாரத்தில் நலிந்த பொதுப் பிரிவின ருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துமாறும், அதற்கேற்ப 250 இடங்களுக்கு கீழ் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 10 சதவீத இடங்களைஅதிகரித்துக் கொள்ளுமாறும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவிக்க வில்லை. அதனால் இந்த ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக் கான மாணவர் சேர்க்கை கலந்தாய் வில் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்து வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. அடுத்த ஆண்டு இதை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது” என்றனர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here