குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடக் கூடாது. மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வித் துறையின்கீழ் செயல்படும் அனைத்து வகை தனியார் பள்ளிகளும் அரசின் சட்ட விதிகளின் அடிப்படையில் தற்காலிக, நிரந்தர அங்கீகாரம் பெற்று இயங்கி வருகின்றன. அவ் வாறு அங்கீகாரம் வழங்கும்போது குடிநீர், கழிப்பிடம் உட்பட அனைத்து வசதிகளும் உள்ளதை பள்ளி நிர்வாகி உறுதி அளித்துள்ள நிலையில், நிபந்தனைகளுக்கு உட்பட்டு அங்கீகாரம் தரப்பட்டு வருகிறது. இந்நிலையில், சில தனியார் பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை எனக் கூறி விடுமுறை விடுவதாக தகவல்கள் வருகின்றன. மாண வர்கள் கல்வி நலன் பாதிக்கும் விதமாக இவ்வாறு விதிகளுக்கு முரணாகச் செயல்படுவது கண்டிக் கத்தக்கது. எனவே, குடிநீர் தட்டுப் பாடுள்ள பள்ளிகளில் உரிய மாற்று ஏற்பாடுகள் செய்து தொடர்ந்து பள்ளி நடைபெற தகுந்த நட வடிக்கைகள் எடுக்க வேண்டியது அந்தந்த நிர்வாகங்களின் கடமை யாகும். அவ்வாறு செயல்பட தவறும் பட்சத்தில் சம்பந்தபட்ட பள்ளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், எல்லா தனியார் பள்ளிகளும் தண்ணீர் தட்டுப்பாட்டால் விடுமுறை அளிக் கப்படாமல் தொடர்ந்து செயல் படுவதை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அறிவிப் பில் கூறப்பட்டுள்ளது.அனைத்து பள்ளிகளும் விடுமுறை அளிக்கப் படாமல் தொடர்ந்து செயல்படுவதை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here