யோகா கலையை ஆயிரக்கணக்கான சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள்  வாழ்நாள் முழுவதும் பயிற்சி பெற்று கண்டுபிடித்துள்ளனர். மச்சேந்திரநாதர், கோரக்கநாதர், திருமூலர் போன்றோர் கடைபிடித்த யோகா கலையை பின்பற்றுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்…. 

யோகா ஆசனம் பயிற்சியை முறையாக செய்வதன் மூலம் பல நோய்களை குணப்படுத்த முடியும். அதேபோல நோய்கள் வராமல் தடுக்கவும் யோகா கலை அவசியம். யோகா கலையை முறையாக பின்பற்றுவதால் நமக்கு தொல்லை கொடுக்கும் நோய்களை கட்டுப்படுத்தவும் முடியும். 

யோகா செய்வதனால் கிடைக்கும் பலன்களை முழுமையாக பெற தகுதிபெற்ற யோகா நிபுணரின் கீழ்தான் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். முறையாக செய்தால் மட்டுமே நமக்கு பலன்கள் கிடைக்கும்.

இளவயதிலேயே முறையாக பயிற்சி செய்தால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பல நோய்கள் வராமல் தவிர்க்கலாம். தினமும் யோகா செய்வனால் ரத்தஓட்டத்தை சீராகும், எலும்புகள், தசை நார்களை வலிமையாக, உறுதியாக வைக்க உதவும்
யோகப் பயிற்சி உடலின் பலவீனமான பகுதிகளை வலுவடைய செய்கிறது. உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. மரணத்தை தள்ளிப்போடுகிறது. சர்க்கரை நோய், ரத்தஅழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும். ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது.

யோகா செய்வதனால் உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் ஆரோக்கியம் கிடைக்கும்.  மனஅழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும். தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு வளர்க்க முடியும். கவனச் சிதறலில் இருந்து விடுபட்டு, மனஒருமைப்பாட்டை வளர்க்க முடியும். 

மாணவர்கள் கற்கும் திறனை மேம்படுத்த முடியும். மனநோய்களான மனஇறுக்கம், அபரிமித உணர்வுகள், வன்முறை உணர்வுகள், பயம் போன்றவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here