இன்றைய செய்திகள்

 

21.06.2019

* சர்வதேச யோகா தினம் – பள்ளிகளில் மாணவர்கள் யோகா செய்ய அறிவுறுத்தல்.

* பருவ மழை பெய்து கண்டலேறு அணையின் நீர் இருப்பு 7 டி.எம்.சி.யை தொட்டால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு சாத்தியம் என்று ஆந்திர அதிகாரிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

* நெல்லையில் நடைபெற்று வந்த தமிழ் மருத்துவம் சார்ந்த நூலகம் அமைக்கும் பணிகள் தற்போது முடிவுறும் தருவாயில் உள்ளன.

* உலக கோப்பை கால்பந்து தொடர்களில் 17 கோல்கள் அடித்து பிரேசில் வீராங்கனை மார்னா சாதனை படைத்துள்ளார்.

 

திருக்குறள்

அதிகாரம்:ஈகை

திருக்குறள்:222

நல்லாறு எனினும்கொளல்தீது மேலுலகம்

இல்லெனினும் ஈதலேநன்று.

விளக்கம்:

நல்லதுதான் என்றுஎவரேனும் சொன்னாலும்பிறரிடம் ஒன்றைப்பெறுவது தீமை; ஏதும்இல்லாதவர்க்குக்கொடுப்பதால்விண்ணுலகம் கிடைக்காதுஎன்றாலும் கொடுப்பதேநல்லது.

 

பழமொழி

Contentment is more than a kingdom

போதும் என்ற மனமேபொன் செய்யும் மருந்து

இரண்டொழுக்க பண்புகள்

  1. பொதுபோக்குவரத்தில்பயணிக்கும் போதுவயதானவர்கள் அல்லதுமுடியாதவர்கள் நின்றுகொண்டு இருந்தால்கண்டிப்பாக எழும்பி இடம்கொடுப்பேன்.
  1. நம்நாட்டின் பொதுசொத்துக்களை காப்பதுஎன் கடமை எனவேஎன்னாலோ என்நண்பர்களாலோ அழிவுநேராதவாறு காப்பேன்.

பொன்மொழி

வாழ்க்கைப் பயணத்தில்ஒவ்வொரு அடியும் சுவை,வளர்ச்சி, போட்டி, வெற்றி,தோல்வி  எனவடிவமைக்கப்பட்டுஇருக்கும்.

பயணத்தின் நோக்கம்இலக்கை அடைவதில் தான்இருக்க வேண்டும் …

—– ஏ.பி.ஜே.அப்துல் கலாம்

 பொது அறிவு

ஜூன்21-இன்று சர்வதேசயோகா தினம்.

  1. யோகாமுறையின்தந்தை என்றுஅழைக்கப்படுபவர் யார்?

 பதஞ்சலி முனிவர்

2.யோகாசனங்கள்எத்தனை வகைப்படும்?

 72 வகைப்படும்

English words & meanings

*Joey – a baby kangaroo.கங்காரு குட்டி

*Jeweler – a person who makes jewels with gold, silver and platinum, நகை செய்பவர்

ஆரோக்ய வாழ்வு

அதிகாலையில் குளிர்ந்தநீரில் எலுமிச்சம் பழத்தைபிழிந்து குடித்தால் உடல்சோர்வு நீங்கும்.

Some important  abbreviations for students

*RAM – Random Access Memory   

 *WWW – World Wide Web

நீதிக்கதை

ஒரு குறிப்பிட்ட ஊரில் பலசிறப்புகளை கொண்டசுவையான பழம் ஒன்றுகிடைக்கும் என்றும், அதைப்புசித்தால் நெடுநாளைக்குபசியே எடுக்காது என்றும்முந்தின ஊரில் சூஃபிஞானிக்கு தகவல்கொடுத்திருந்தார்கள்.

ஆனால், அந்த ஊருக்குப்போன அவருக்கு, காய்கனிசந்தையில் அந்தப் பழம்கண்களில் படவில்லை.தயங்கியபடியேபார்த்துக்கொண்டு வந்தார்.

அவருடைய தயக்கத்தைபார்த்த ஓர் இளைஞன்,அவரிடம் வந்தான். “நீங்கள்எதையோ தேடுவதுபோலதெரிகிறது. நான்உங்களுக்கு உதவலாமா?”என்று கேட்டான்.

அவனிடம் “இந்த ஊரில்அபூர்வமான பழம் ஒன்றுகிடைக்கும் என்றும், அதைஉட்கொண்டால் சிலநாட்கள் வரை பசியேஎடுக்காது என்றும்சொன்னார்கள். அந்தப்பழம் கிடைத்தால் அல்லதுஅதன் விதை கிடைத்தால்அதை எடுத்துப் போய்பட்டினியால் வாடும் மக்கள்உள்ள பகுதியில் பயிரிடமுயன்று அந்தப் பகுதிமக்களின் பசியைப் போக்கமுடியுமா என்றுபார்க்கிறேன்” என்று பதில்சொன்னார் ஞானி.

இளைஞன் உடனேபரபரத்தான். “சற்றுஇருங்கள், வருகிறேன்”என்று சொல்லிவிட்டுபுறப்பட்டுப் போனான்.சிறிது நேரம் கழித்துவந்தான். அவன் கையில்ஒரு பழம். “நீங்கள் கேட்டபழம் இதுதான்,இந்தாருங்கள்” என்றுசொல்லி அதை ஞானியிடம்கொடுத்தான்.

“இந்த ஊரில் இந்தப் பழம்நிறையவே கிடைக்கும்என்று சொன்னார்களே”என்று கேட்டார் ஞானி.

“உண்மைதான். இந்தஊரில் இந்த பழம்நிறையதான்கிடைத்துக்கொண்டுவந்தது. ஆனால், மக்கள்சுயநலமிகள்ஆகிவிட்டார்கள். தாம்அனுபவிக்கும் பலனை பிறயாரும் அனுபவிக்கக்கூடாது என்ற சுயநலநோக்கில் இந்தப் பழத்தைபதுக்கஆரம்பித்துவிட்டார்கள்.இதைப் பயிரிடும்முறையையும் மிகரகசியமாக வைத்துக்கொண்டார்கள். என் வீட்டில்இருந்த ஒரு பழத்தைஉங்களுக்காக நான்கொண்டு வந்திருக்கிறேன்.பட்டினியால் வாடும்மக்களுக்கு உதவுவதற்காகஇந்தப் பழத்தை நீங்கள்பயன்படுத்த போவதாகசொன்னதைக் கேட்டதும்உங்களுக்கு எப்படியாவதுஉதவ வேண்டும் என்றுஎனக்கு தோன்றியது”என்று சொன்னான் அந்தஇளைஞன்.

அவனுடைய செயலாலும்,சொற்களாலும் நெகிழ்ந்தஞானி, அவனைவாழ்த்தினார்: “உன்னைப்போல பிறருக்காக உதவமுன்வரும் இளைஞர்கள்பெருகினார்களானால்,அவர்கள் வாழும் பகுதியில்யாருக்கும் எந்தக் குறையும்இருக்காது.

வெள்ளி

சமூகவியல் & விளையாட்டு

* நமது சூரிய குடும்பத்தில்புதன் தான் மிக சிறியகிரகம் ஆனால் பூமியின்துனைக்கோளானசந்திரனை விட சற்றுபெரிதாக இருக்கும்.

* இது தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்ள(பூமியின் கணக்குக்படி) 59நாட்கள்எடுத்துக்கொள்ளும்ஆனால் சூரியனை வெறும்88 நாட்களில்சுற்றுவந்துவிடும்.

ஆடலாம்! விளையாடலாம்!

பாரம்பரிய விளையாட்டு – 2

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here