இரத்தம் இதயத்துக்கு வரும்போது ஒரு குறிப்பிட்ட வேகத்திலும், இதயத்திலிருந்து வெளியேறும்போது வேறு ஒரு வேகத்திலும் செல்கிறது.

இதனைத் தான் நாம் இரத்த அழுத்தம் என்கிறோம், இதயத்துக்குத் தேவையான இரத்தம் செல்ல தடை உண்டாவதுதான் குறை இரத்த அழுத்தம்  ஏற்பட அடிப்படைக் காரணம்.

தடகள வீரர்கள் கடுமையான உடற்பயிற்சி செய்பவர்கல் தீவிரமாக ஜிம் பயிற்சி செய்பவர்கள், ஒல்லியான உடல்வாகு உள்ளவர்கள், கர்ப்பிணிகள், தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், வயதானவர்கள், படுக்கையில் நீண்ட காலம் படுத்திருப்பவர்கள் போன்றோருக்குக் குறை இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

தலைச்சுற்றல், மயக்கம், வாந்தி வழக்கத்துக்கு மாறான அதீத நாவறட்சி சோர்வு, பலவீனம் கண்கள் இருட்டுவது போன்ற உணர்வு, பார்வை குறைவது, மனக்குழப்பம், வேலையில் கவனம் செலுத்த முடியாத நிலைமை.

உடல் சில்லிட்டுப்போவது, மூச்சுவாங்குவது போன்ற  அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றோ அல்லது பல அறிகுறிகள் உணர முடியும்.

பட்டாணி இரத்த அழுத்தத்தை அதிகரிக்க உதவிடும், இதில் ப்ரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் ஃபொலிக் அமிலம் இருக்கிறது ஒட்டுமொத்த இதய பராமரிப்பிற்கும் இது உதவிடும்.

ஸ்டார்ச் அதிகமிருக்கும் உருளைக்கிழங்கு எடுத்துக் கொண்டால் குறந்த இரத்த அழுத்தம் பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம்.

குறைந்த இரத்த அழுத்ததை சரிசெய்ய வைட்டமின் சி உணவுகளை நிறைய எடுத்துக் கொள்ளலாம்.

ஆரஞ்சு பழத்தை விட பப்பாளிப் பழத்தில்  நிறைய வைட்டமின்கள் நிறைந்திருக்க்கிறது, அதைவிட பப்பாளி பழத்தில் நிறைய வைட்டமின்கள் நிறைந்திருக்கிறது.

சாப்பிட்ட அரை மணி நேரத்திற்கு முன்பாக கொய்யாப்பழம் சாப்பிட்டால் குறைவான இரத்த அழுத்தத்திலிருந்து தப்பிக்கலாம்.

உடலில் இரத்தணுக்களின் அளவு சீராக இருக்க நினைத்தால், பீட்ரூட் ஜூஸை அடிக்கடி குடித்து வாருங்கள்.

முக்கியமாக இரத்த சோகை உள்ளவர்கள், இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால் உடலில் இரத்தத்தின் அளவு வேகமாக அதிகரிக்கும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here