இன்றைய திருக்குறள்                                                                                                                                                  
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

பொருள்:

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் என்ன பயன்?. ஒன்றுமில்லை.
✡✡✡✡✡✡✡
 பொன்மொழி

துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு. ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே!
⚜⚜⚜⚜⚜⚜⚜
Important Daily Used Words

 Priest  புரோகிதர்

Professor  பேராசிரியர்

Proprietor  உரிமையாளர்

Prose Writer  கட்டுரை ஆசிரியர்

Publisher  வெளியீட்டாளர், பதிப்பாளர்.

☘🍀🌿🎋☘🌿🍀
இன்றைய மூலிகை

கொத்தமல்லி:

இதுவும் நல்ல டானிக் பசியைத் தூண்டும், பித்தம் குறையும். காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி குணமாகும். இரத்தத்தில் கலந்துள்ள சர்கரையை குறைக்கவும், இரத்த அழுத்தம், கல்லடைப்பு, வலிப்பு, ஆகியவை குணமாகும். மன வலிமை மிகும். மன அமைதி, தூக்கம் கொடுக்கும். வாய் நாற்றம், பல்வலி, ஈறு வீக்கம் குறையும்.
✍✍✍✍✍✍✍

பொது அறிவு

1.இந்தியா, வங்கதேசம், சீனா இடையே ஓடும் நதி?

பிரம்மபுத்திரா

2.கேனிடே குடும்பத்தைச் சேர்ந்த விலங்கு எது?

நரி

3. உலகின் சிறிய கடல் எது?

ஆர்டிக் கடல்

4.மும்பை துறைமுகத்தில் கவிழ்ந்த கப்பலின் பெயர் என்ன?

எம்.எஸ்.சி., சித்ரா

✒✒✒✒✒✒✒

நூலாசிரியர்-நூல்கள்

வாணிதாசன்

கொடி முல்லை, எழிலோவியம், தமிழச்சி
🧬🧬🧬🧬🧬🧬🧬

Today’s grammar

About Prepositions / முன்னிடைச்சொற்கள்
முன்னிடைச்சொற்கள் எப்பொழுதும் பெயர்சொற்களுக்கும் மற்றும் சுட்டுப்பெயர்களுக்கும் முன்னால் மட்டுமே பயன்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். (வினைச்சொற்களுக்கு முன்னால் பயன்படுவதில்லை.)

எடுத்துக்காட்டாக:

Subject + to be + Preposition + Noun/Pronoun

The book is + on + the table.
The letter is + under + your English book.

“முன்னிடைச்சொற்கள்” தனித்த ஒற்றைச் சொல்லாகவும், கூட்டுச் சொற்களாகவும் இரண்டு வகையில் பயன்படுகின்றன.

எடுத்துக்காட்டு:

ஒற்றை முன்னிடை சொல் (one word)

I am staying at home.
I spoke to her on wednesday morning.
I bought this computer in the summer.

முன்னிடை கூட்டுச்சொற்கள் (a group of word)

The cat is on the left of the dog.
The driver is in front of passengers.
They are at the top of stairs.

முன்னிடைச்சொற்கள் பயன்படும் விதங்களை மூன்றாக வகைப்படுத்தலாம். அவை, பெயர்சொற்களுக்கு முன்பாக பயன்படுபவைகள் (at home, on water), சுட்டுப்பெயர்களுக்கு முன்பாக படுபடுபவைகள் (in it, next to me), முற்றுவினையில்லா சொற்றொடர்களுக்கு (noun phrase) முன்பாக பயன்படுபவைகள் (across from the tall building) போன்றவைகளாகும்.

இந்த முன்னிடைச்சொற்களில் மூன்று பிரிவுகள் உள்ளன.

1. நேர முன்னிடைச்சொற்கள் (Time Prepositions)
2. இட முன்னிடைச்சொற்கள் (Place Prepositions)
3. திசை முன்னிடைச்சொற்கள் (Direction Prepositions)

இம்மூன்று பிரிவுகளையும் ஒவ்வொரு பாடமாக கற்போம். இன்றைய பாடத்தில் “நேர முன்னிடைச்சொற்கள்” பற்றி மட்டும் பார்ப்போம்.
🗣🗣🗣🗣🗣🗣🗣

இன்றைய கதை

சிட்டுக்குருவியின் ஆசை

 இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி அதில் வசித்து வந்தன. ஒருநாள் இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில்இ ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்து கொண்டது. சிறிது நேரத்தில் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. தன் கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்து குருவி அக்கா எங்கள் வீட்டிற்குள் எதற்கு நுழைந்தாய் வெளியே போ என்றது. நான் போகமாட்டேன். உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு என்றது குருவி.

 தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும் யோசனையுடனும் பறந்து போனது. சிட்டுக்குருவி கூட்டில் உட்கார்ந்துக் கொண்டிருந்தது. திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்து ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பின் சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போனது. அடுத்தவர்களின் வீட்டிற்குள் நுழைந்தது தவறு என தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது.

நீதி :
அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி.

🧾🧾🧾🧾🧾🧾🧾
செய்திச் சுருக்கம்

✳ ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது

✳ மார்கன் மின்னல் சதம், இங்கிலாந்து 391 ரன்கள் குவித்தது.

✳ பீகாரில் மூளைக் காய்ச்சல் காரணமாக 109 பேர் உயிரிழப்பு

✳ தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக எந்த பள்ளியும் இதுவரை மூடவில்லை ,தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் விளக்கம்.

✳ 13மாவட்டங்களில் நாளையும் அனல் காற்று வீசும், பகல் நேரத்தில் வெப்பம் அதிகரிக்கும், வானிலை ஆய்வு மையம் தகவல்.

🌿☘🎋🌿☘🍀🌿

தொகுப்பு:

T.THENNARASU,
TN DIGITAL TEAM,
S.G.TEACHER,
R.K.PET BLOCK, THIRUVALLUR DT.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here