சென்னை: தமிழக அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை குறித்த விபரங்களை, நாளை முதல், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசு பணியாளர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர்கள், நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், நகராட்சி பள்ளி ஆசிரியர்கள் என, 4.66 லட்சம் பேர் உள்ளனர்.அவர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொகை குறித்த விபரம், அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தால் தயாரிக்கப்பட்டு, cps.tn.gov.in/public என்ற, இணையதள முகவரியில், பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதில், மாதாந்திர சந்தா தொகை, வட்டி, இறுதி இருப்பு மற்றும் கணக்கு தாள்களை, நாளை முதல், சந்தாதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here