நாம் நமது அன்றாட வாழ்வில், நமது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய பல வகையான கீரைகளை சாப்பிட்டிருப்போம். ஆனால் நாம் அனைத்து கீரைகளுமே நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தினாலும், வல்லாரை கீரை மற்ற கீரைகளை விட தனித்துவம் மிக்கது தான்.

தற்போது இந்த பதிவில் வல்லாரை கீரையில் உள்ள வல்லமைமிக்க மருத்துவகுணங்கள் பற்றி பார்ப்போம்.

மனநோய்

மனநோய்களை தீர்ப்பதில் வல்லாரை கீரை மிகவும் முக்கியமான பங்கினை வகிக்கிறது. தினமும் அதிகாலை வல்லாரை கீரையை சாப்பிட்டு வந்தால், இப்பிரச்னையில் இருந்து நிரந்தரமாக விடுதலை பெறலாம்.

உடல் வலிமை

உடல் பலவீனமானவர்கள், இந்த கீரையையுடன், இரண்டு பாதாம் பருப்புகளை சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடல் பலவீனம் நீங்கி உடல் வலிமை பெறும்.

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை பிரச்னை உள்ளவர்கள், வல்லாரை சாறு 15 மி.லி, கீழாநெல்லி இலைச்சாறு 15 மி.லி, பசும்பால் 100 மி.லி எடுத்து மூன்றையும் கலந்து குடித்து வந்தால், மஞ்சள் காமாலை பிரச்சனையில் இருந்து விடுதலை பெறலாம்.

இதய நோய்

இதயநோய் பிரச்னை உள்ளவர்கள், வல்லாரை கீரை இல்லை 4, பாதாம்பருப்பு 1, மிளகு 3, ஏலக்காய் 3 சேர்த்து, நன்றாகா அரைத்து, கற்கண்டோடு சேர்த்து தினமும் காலையில் சிறிதளவு சாப்பிட்டு வந்தால், இதயம் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறலாம்.

ஞாபகசக்தி

ஞாபகமறதி அதிகமாக உள்ளவர்கள் தினமும் உணவில் வல்லாரை கீரையை சேர்த்து வந்தால், ஞாபக சக்தி அதிகரிக்கும்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here