*அரசு மலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின பேரணி**
*
*சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், மண்ணூர் மலை,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின பேரணி நடத்தப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகன் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களும் மாணவர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்*. *பின்னர் பட்டதாரி ஆசிரியர் ஜோசப் ராஜ், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் 2002ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது. 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் வேலைக்கு செல்லக்கூடாது கண்டிப்பாக பள்ளியில் தான் படிக்க வேண்டும் என தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வை பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் கூறினார் இறுதியாக ஆசிரியர் பால்குமார் நன்றி கூறினார்*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here