தமிழக அரசால் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு எழுதுபவர்களுக்கு, அரசு நடத்தும் இலவசப் பயிற்சி வகுப்புகள் குறித்து சென்னை ஆட்சியர் அறிவித்துள்ளார்.இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளதாவது:

“மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (பொது) சாந்தோம் சென்னை அலுவலகத்தில் இயங்கி வரும்தன்னார்வப் பயிலும் வட்டத்தின் மூலம் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.இப்பயிற்சியின் மூலம் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு மனுதாரர்கள் பயனடைந்துள்ளனர். இதனைக் கருத்தில்கொண்டு தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்-4, 2019 தேர்வுக்கு சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மனுதாரர்கள் கலந்துகொண்டு எளிதில் வெற்றி பெற ஏதுவாக போட்டித்தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.இதற்கான பயிற்சி வகுப்பு வரும் ஜூன் 19 முதல் சென்னை சாந்தோமிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடங்கப்பட உள்ளது.

இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள மனுதாரர்கள் 18.06.2019-ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்(பொது) சாந்தோம் சென்னை-4 அலுவலகத்தை திங்கள் முதல் வெள்ளி வரை அலுவலக நேரங்களில் தொடர்புகொண்டு தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 044-24615160 என்ற சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்”.இவ்வாறு சென்னை ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here