சிலருக்கு அபாரமான ஆற்றல் இருந்தாலும்அதைப் பயன்படுத்த மாட்டார்கள்விளைவுவாழ்க்கையில் பின்தங்கியே இருப்பார்கள்தன்னையே நொந்துகொள்வார்கள்அதை உணர்த்தும் கதை!

`ஒருவர் ஒரு பொருளை ஏழு ஆண்டுகள் பயன்படுத்தவில்லையென்றால்அவருடைய வாழ்நாளில் அந்தப் பொருளை அவர் திரும்ப பயன்படுத்தவே போவதில்லை’ என்றொரு புகழ் பெற்ற வாசகம் உண்டு.

தன்னம்பிக்கை கதை

வேப்பங்குச்சியில் இருந்து வைர அட்டிகை வரை இணையத்தில் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் ஏராளம் கொட்டிக் கிடக்கின்றனதேவையிருக்கிறதோ இல்லையோ விலை உயர்ந்த பொருட்களை ஆசைப்பட்டு வாங்குகிறோம்அதைத் தொடர்ச்சியாக பயன்படுத்தாமல் தோன்றும்போது எடுத்துப்பார்த்துஆனந்தப்பட்டுக்கொள்கிறோம்சில மாதங்களில் அப்படியொரு பொருள் நம்மிடம் இருப்பதையே மறந்துவிடுவோம்திடீரென்று ஒரு நாள் எடுத்துப் பார்க்கும்போதுஅந்தப் பொருள் பயன்படுத்தத் தகுதியற்றதாக்கிகுப்பையில் வீசவேண்டிய நிலையில் இருக்கும்வருத்தப்படுவோம்.

அத்தகைய விலையுயர்ந்த பொருள்களை போல… சிலருக்கு அபாரமான ஆற்றல் இருந்தாலும்அதைப் பயன்படுத்த மாட்டார்கள்விளைவுவாழ்க்கையில் பின்தங்கியே இருப்பார்கள்… தன்னைத் தானே நொந்துகொள்வார்கள்அதை உணர்த்தும் கதை இது!

ஓர் ஊரில் ஏழை ஒருவர் இருந்தார்அவருக்கு தங்கப் புதையல் ஒன்று கிடைத்ததுஅவருக்கு அதைச் செலவு செய்யும் ஆசையில்லைதங்கப் புதையலை தன்னுடைய வீட்டின் பின்புறத்திலுள்ள ஒரு தோட்டத்தில் யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்தார்தினமும்ரகசியமாக அதை எடுத்துப் பார்த்துஆனந்தப்பட்டுக்கொள்வார்பிறகுஅதே இடத்தில் வைத்து மூடிவிடுவார்இப்படியே சில மாதங்கள் போய்க்கொண்டிருந்தனஒருநாள்அவர் வந்து பார்க்கும்போது அந்த இடத்தில் தங்கக் கட்டி இல்லைஅவரை நோட்டம் விட்டுக்கொண்டிருந்த ஒருவர்அதைத் திருடிச் சென்றிருந்தது அவருக்குத் தெரியாது.

தங்கத்தை பயன் படுத்த வேண்டும்

புதையல் மாயமானதால் ஏழைக்கு நெஞ்சடைத்துவிட்டதுகேவிக் கேவி அழுதார்அழுதுகொண்டே வீட்டுக்குப் போனார்அழுகை சப்தம் கேட்டுபக்கத்து வீட்டுக்காரர் ஓடோடி வந்து பார்த்தார்ஏழை நடந்ததைச் சொல்லிஅவரிடம் புலம்பினார்அப்போது, `தங்கப் புதையல் இருந்த இடத்தில்அதே அளவுக்கு ஒரு கருங்கல்லை வைத்து மூடிபுதையல் என்றே நினைத்துக்கொள்ளுங்கள்.. பிரச்னை சரியாகிவிடும்’ என்றுபக்கத்து வீட்டுக்காரர் கூறினார்புரியாமல் விழித்தார் ஏழை!

`முன்புநீங்கள் தங்கப் புதையலை ஒளித்து வைத்துப் பார்த்துக்கொண்டு மட்டும்தானே இருந்தீர்கள்இப்போதுகருங்கல்லைப் புதைத்து வைத்து பார்த்துக் கொண்டிருக்கப்போகிறீர்கள்எப்படியும் அதை நீங்கள் பயன்படுத்தப்போவதில்லைஎனவேஇரண்டும் ஒன்றுதான்!’ என்று விளக்கினார்ஏழைக்கு ஞானம் பிறந்தது!

ஏழை

உங்களிடம் உள்ள சிறப்பான ஆற்றல் எதுவோ… அதை மறைத்து வைக்காதீர்கள்கண்டுபிடியுங்கள்பட்டைத் தீட்டி ஜொலிக்க விடுங்கள்இந்தச் சமூகத்தில் நீங்கள் ஒரு வெற்றியாளராகக் கொண்டாடப்படுவீர்கள்.

நீதிதங்கமாக இருந்தாலும் பயன்படுத்தினால்தான் மதிப்பு… இல்லையேல் அதுவும் கருங்கல்லுக்குச் சமம்தான்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here