பூமி சூரியனை சற்றே சிறிய வட்டப்பாதையில் சுற்றிவருவதால், பூமிக்கு சூரியனை முழுவதுமாக சுற்றிவர 12 மாதங்கள் ஆகிறது. அதே சமயத்தில், வியாழன் கிரகம் சுற்றி வருவதற்கு 12 வருடங்கள் ஆகிறது. நமது சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கிரகமாக இருப்பது வியாழன் தான்.

தற்போது வியாழன் நமது பூமிக்கு மிகவும் அருகில் இருக்கிறது.

சூரியனும், பூமியும், வியாழனும் ஒரே நேர்கோட்டில் வருவதால் இந்த மாதம் முழுவதுமே நம்மால் வியாழன் கிரகத்தைப் பார்க்க முடியும்.என்றாலும், இன்று (ஜூன் 10ம் தேதி) பூமிக்கு மிக அருகில் வியாழன் வருவதால், இன்று இரவு இன்னும் தெளிவாக நம்மால் வெறும் கண்களாலேயே வியாழனைப் பார்க்க முடியும்.
நம் பூமியில் இருந்துப் பார்க்கும் போது நிலவு தெரிகிறதல்லவா, அதே போல், தொலைநோக்கியில் இன்று இரவு வானத்தைப் பார்த்தால், வியாழனை சுற்றிவரும் நான்கு பெரிய நிலாக்களையும் சேர்த்து தெளிவாகப் பார்க்க முடியும்.

வியாழன் ஒரே இடத்தில் நகராமல் இருந்தால் 12 மாதங்களுக்கு ஒருமுறை வியாழனின் அருகில் பூமி வந்து செல்லும். வியாழன் சற்றே மெதுவாகச் சூரியனைச் சுற்றி வந்து கொண்டிருப்பதால் 13 மாதங்களுக்கு ஒரு முறை இது நிகழும். அதாவது அடுத்த வருடம் ஜூலை 2020-ல் இதே போன்ற நிகழ்வு நிகழும். தூசு மண்டலங்களும், நகரின் டீசல் புகையும் அடங்கியப் பின், இரவு வானத்தில் நட்சத்திரங்களைப் பாருங்கள். நட்சத்திரங்களைப் போல மின்னிக் கொண்டிருக்காமல் பிரகாசமாக ஒரு புள்ளி தெரிந்தால் அது தான் வியாழன். மறக்காமல், பள்ளியில் படிக்கும் உங்கள் குழந்தைகளிடமும் வானியலைப் பற்றி எடுத்துச் சொல்லி, அவர்களுக்கும் காட்டி மகிழுங்கள். படிப்பு என்பது பள்ளியின் வகுப்பறையோடு முடிந்து விடக் கூடிய விஷயமல்ல

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here