கேரட் கீர்

தேவையான பொருட்கள்

கேரட் – 200 கிராம்
தேங்காய்த் துருவல் – அரை மூடி
கொத்தமல்லித் தழை – ஒரு கட்டு
நாட்டுச் சர்க்கரை – தேவையான அளவு

செய்முறை : கேரட், தேங்காய், கொத்தமல்லித் தழை இவை மூன்றையும் தனித்தனியாக மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி பின்னர் அனைத்து சாறுகளையும் ஒன்றாகக் கலந்து அதனுடன் தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து சுவையாக பருகலாம். 

பயன்கள் : இந்த கேரட் பானத்தை தொடர்ந்து பருகிவந்தால் முகத்தில் உண்டாகும் அதிகப்படியான எண்ணெய் பசைத் தன்மை நீங்கி முகம் பொலிவடையும், வயிறு எரிச்சல் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்கும். புற்றுநோயை குணமாக்க உதவும் அற்புத பானமாகவும் இது உதவுகிறது.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here