இன்றைய செய்திகள்

 

10.06.2019

* தென்மேற்குப் பருவமழை கேரளத்தில் சனிக்கிழமை (ஜூன் 8) தொடங்கியது. 10ஆம் தேதி திருச்சூர் மாவட்டத்துக்கும், 11ஆம் தேதி எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

* சே குவாரா, ஃபிடல் காஸ்ட்ரோவை பேட்டி கண்ட தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் கோபிநாத் மறைவு.

* தமிழகத்தில் கொளுத்தும் கோடை வெயில் 10,080 ஏரிகள் வறண்டன: 26 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது.

*  பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் இளம் வீராங்கனை ஆஷ்லி பர்டி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

* உலக கோப்பை கிரிக்கெட்

திருக்குறள்

அதிகாரம்:ஒப்புரவறிதல்

திருக்குறள்:213

புத்தே ளுலகத்தும் ஈண்டும்பெறலரிதே

ஒப்புரவின் நல்ல பிற.

விளக்கம்:

பிறர்க்கு உதவிடும்பண்பாகிய ஒப்புரவுஎன்பதைவிடச் சிறந்தபண்பினை இன்றையஉலகிலும், இனிவரும் புதியஉலகிலும் காண்பது அரிது.

பழமொழி

Hitch your wagon to a star

உள்ளுவதெல்லாம்உயர்வுள்ளல்

இரண்டொழுக்க பண்புகள்

  1. போதும்என்னும் மனமேபொன் செய்யும் மருந்துஎன்பதால் எனக்கு இருப்பதுபோதும் என்று இருப்பேன்.
  1. என்ஆசிரியரையும்பெற்றோரையும் கஷ்டப்படுத்தும் எந்தகாரியத்தையும் செய்யமாட்டேன்.

பொன்மொழி

இருட்டை குறைகூறுவதற்கு பதில் அங்குஓர் மெழுவர்த்தியைஏற்றிவையுங்கள் , இருள்விலகும் …

—–பெஞ்சமின் பிராங்ளின்

பொது அறிவு

1.முட்டையே இடாமல் குஞ்சுபொரிக்கும் உயிரினம் எது?

திமிங்கலம்.

  1. மனிதனைப்போலவேசிரிக்கும் பறவை எது?

கூக்குபேரா(ஆஸ்திரேலியா).

ஆரோக்ய வாழ்வு

சிவப்பு நிறப் பழங்களில்சிறந்த ஆக்சிஜனேற்றிஅடங்கியுள்ளதால்புற்றுநாேயை தடுக்கிறது.

Some important  abbreviations for students

* IPS – Indian Police Services

* IAS – Indian Administrative Service

நீதிக்கதை

“அன்று காலை, அக்பரைப்பார்த்தஉடனேயே அவர்அன்று என்ன செய்யநினைக்கிறார் என்றுபீர்பலுக்குத் தெரிந்துவிட்டது. குதிரைச்சவாரிகேற்ற உடையைஅவர் அணிந்திருந்தார்.வரிசையாகஅடுக்கிவைக்கப்பட்டிருந்தஆயுதங்களைக் கவனித்துப்பார்த்துக் கொண்டிருந்தார்.அவர் வேறு எங்கும்பார்க்காமல் ஆயுதங்களின்மீதே மிகவும் கவனமாகஇருந்தார்.

அக்பர் அன்றுவேட்டையாடத்திட்டமிட்டிருக்கிறார் என்று பீர்பல் புரிந்துகொண்டார்.வேட்டையாடுவதுஅக்பருக்கு மிகவும் பிடித்தப்பொழுதுப் போக்கு! ஆனால்அவர் வேட்டைஆடுவதுபீர்பலுக்குப்பிடிக்கவில்லை. அதைஎப்படித் தடை செய்வதுஎன்பதைப் பற்றியே அவர்சிந்திப்பார்.

சற்று நேரங்கழித்துத் தன்கவனத்தைஆயுதங்களிலிருந்துவிடுத்து, பீர்பலின் மீதுசெலுத்திய அக்பர் “நான்இன்று என்ன செய்யப்போகிறேன் தெரியுமா?”என்று பீர்பலைப் பார்த்துக்கேட்டதும், “மற்றவர்களின்மனத்திலுள்ளதை அறிந்துகொள்ளும் திறமைஎனக்குக் கிடையாது”என்றார் பீர்பல்.

 “பொய் சொல்லாதே, பீர்பல்!நான் என்ன செய்யப்போகிறேன் என்று உனக்குநன்றாகத் தெரியும்.வேண்டுமென்றேதெரியாதது போல்நடிக்கிறாய். மிதமானகுளிர்வீதம் இந்தக் காலைப்பொழுதில் வேட்டைஆடச்சென்றால் மிகவும் நன்றாகஇருக்கும் என்பது என்கருத்து! உன் கருத்துஎன்னவோ?” என்றார். “தங்களின் கருத்தேஎன்னுடைய கருத்தும்!”என்றார் பீர்பல். “அப்படியானால், நீயும்என்னுடன் வேட்டையாட வரவேண்டும்!” என்றார் அக்பர்.

“தங்கள் கட்டளைப் படிநடக்க சித்தமாகஇருக்கிறேன்” என்றுபணிவுடன் பீர்பல்பதிலளித்தார். “பீர்பல்! நீஉடனிருந்தால் களைப்பேதெரிவதில்லை. நாவில்உனக்கு இத்தனைவலிமையைக் கொடுத்தஇறைவன், உடலிலும்கொடுத்து இருக்கிறாராஎன்பதையும் அறியஆசைப்படுகிறேன்”என்றார். “ஆகட்டும் பிரபு!”என்றார் பீர்பல்.

சற்று நேரத்திற்குப்பின்,அக்பர் ஒரு பெரிய படைவீரர்களின் அணியுடன்காட்டை நோக்கிப்புறப்பட்டார். பீர்பலும்அக்பருடன் சென்றார்.காட்டினுள் நுழைந்தபிறகு,அக்பரின் வீரர்கள் தாரை,தப்பட்டை ஆகியவற்றைஉரக்க ஒலித்துக் காடேஅதிரச் செய்தனர். அந்தசத்தத்தைக் கேட்டு காட்டுமிருகங்கள் மிரண்டுஅங்குமிங்கும் சிதறி ஓட,அக்பரும், மற்றவர்களும்அவற்றைத் துரத்திச்சென்று, கொன்றுகுவித்தனர்.

திடீரென ஒரு புலிபுதரிலிருந்து சீறிப் பாய்ந்துஅவர்களை நோக்கி வந்தது.தாரை, தப்பட்டைகளின்ஒலியினால்எரிச்சல்அடைந்த புலிஅவர்கள் மீது பாயமுனைந்த போது, அக்பர்தன் கையில் இருந்தஈட்டியை அதன்மீது எறிய,பயங்கரமாக உறுமிக்கொண்டே புலி மண்ணில்சாய்ந்தது. புலி இறந்துவிட்டதால் அக்பர்உற்சாகமுற்றுக் கையைஉயர்த்திக் கூச்சலிட,சுற்றியிருந்த வீரர்கள்மகிழ்ச்சி ஆரவாரம்செய்தனர்.

மாலைக்குள் அக்பர்மற்றொரு புலியையும்வீரத்துடன் வேட்டையாடிக்கொன்றார். பிறகுஅனைவரும் சென்று ஓய்வுஎடுக்க, அக்பர் தனியாகஅமர்ந்து பீர்பலுடன்உரையாடிக்கொண்டிருந்தார்.

மாலை மங்கிய நேரம்! பகல்முழுவதும் வானில் பறந்துதிரிந்து கொண்டிருந்தபறவைகள் தங்கள்கூடுகளுக்குத் திரும்பிக்கொண்டு இருந்தன.அவற்றின் இனிமையானகுரல்களை இருவரும்கேட்டு ரசித்துக்கொண்டிருந்தனர்.அவர்கள் அமர்ந்துஇருந்தஇடத்திற்கு அருகில் இருந்தஒரு மரத்தில் இருஆந்தைகள் பறந்து வந்துஉட்கார்ந்து ஒலியெழுப்பத்தொடங்கின.

அவற்றின் ஒலியை வெகுநேரம் உன்னிப்பாகக்கவனித்த அக்பர், “இந்தஆந்தைகளின் மொழிநமக்குப் புரிந்தால்எவ்வளவு நன்றாகஇருக்கும்!” என்றார் பீர்பல். “பிரபு! அவற்றின் மொழிஎனக்குத் தெரியும்!” என்றார்பீர்பல்.

“அப்படியா? பிறகு ஏன்சும்மாயிருக்கிறாய்? அவைஎன்ன பேசுகின்றன என்றுஉடனே சொல்!” என்றார்அக்பர். “பிரபு!அவையிரண்டில் ஒன்றுமணப்பெண்ணின் தந்தை!மற்றொன்று பிள்ளையின்தந்தை! அவைவரதட்சிணையைப் பற்றிவிவாதம் செய்து கொண்டுஇருக்கின்றன.பிள்ளையின் தந்தைமிருகங்களே இல்லாதநாற்பது காடுகள்சீர்வரிசையாகத் தரவேண்டும் எனக் கேட்கிறது.பெண்ணின் தந்தைதன்னால் இருபது காடுகள்மட்டுமே தரமுடியும் என்றுசொல்கிறது,” என்றார்பீர்பல்.

தொடர்ந்து, “பெண்ணின்தந்தையான அந்த ஆந்தைமேலும் தனக்கு ஆறுவாரகாலம் அவகாசம்தந்தால், மீதி இருபதுகாடுகளையும் ஏற்பாடுசெய்ய முடியும் என்கிறது,”என்றார். “இது என்னஉளறல்?மிருகங்களேஇல்லாதகாடுகள் அதற்குஎங்கிருந்து கிடைக்கும்?இருபது காடுகள் தருவதாகஅது எப்படி ஒப்புக்கொண்டது?” என்றார்அக்பர்.

“அது உளறவில்லை!சரியாகத்தான் சொல்கிறது.நீங்கள் இருக்கும்தைரியத்தில்தான் அதுஅப்படிப் பேசுகிறது!”என்றார் பீர்பல். “சரிதான்!ஆந்தைதான் உளறுகிறதுஎன்று நினைத்தால் நீயும்உளறுகிறாயே!” என்றார்அக்பர். “நான்உளறவில்லை, பிரபு!ஆந்தையும் உளறவில்லை!நீங்கள் ஒருமுறைவேட்டையாட வந்தாலே,காட்டில்உள்ள மிருகங்கள்அனைத்தும் கொல்லப்பட்டுவிடுகிறது.

அதுபோல் இதுவரைநீங்கள் இருபது காடுகளைமிருகங்களேயில்லாமல்செய்து விட்டீர்கள். இன்னும்அடுத்த ஆறு வாரத்தில்நீங்கள் இருபது முறைவேட்டையாடினால்,மீதியுள்ள இருபதுகாடுகளும்காலியாகிவிடும்! அந்ததைரியத்தில்தான் அந்தஆந்தை அவ்வாறுகூறுகிறது!” என்றார் பீர்பல்.

பளீரென முகத்தில்அறைந்ததுபோல் இருந்தபீர்பலின் விளக்கம்அக்பரை மௌனமாக்கிவிட்டது. தன் செய்கைக்குமுதன்முதலாக வெட்கித்தலை குனிந்த அக்பர், “பீர்பல்! என் கண்களை நீஇன்று திறந்து விட்டாய்!என்னுடைய மகிழ்ச்சிக்காககாட்டில் வாழும்மிருகங்களைக் கொன்றுகுவிப்பது ஈனமான செயல்என்று புரிந்து கொண்டேன்.இன்றுமுதல்வேட்டையாடுவதை நிறுத்திவிடப் போகிறேன்” என்றார்அக்பர்.

பீர்பலுக்குத் தன்செவிகளையே நம்பமுடியவில்லை. இத்தனைஎளிதாக அக்பரின் மனம்மாறும் என்று அவர்நினைக்கவில்லை. “பீர்பல்!என்ன அப்படிப்பார்க்கிறாய்? நான்இப்போது சொன்னதைக்கேட்டு அந்த ஆந்தை என்னசொல்கிறது என்றுஎனக்குச் சொல்!” என்றார்அக்பர்.

“சக்கரவர்த்தியின் மனம்மாறிவிட்டதால், இனிஎன்னால்மிருகங்கள்அற்றக்காடுகளைவரதட்சிணையாக அளிக்கமுடியாது என்று அதுகூறுகிறது!” என்று பீர்பல்கூறவும், அக்பர் பலமாகச்சிரித்தார்.”

திங்கள்

தமிழ் & பாடல்

தூய தமிழ் வார்த்தைகள்கற்போம்

அபிஷேகம் – திருமுழுக்கு

அலங்காரம் – ஒப்பனை

அவஸ்தை – தொல்லை

அபூர்வம் – புதுமை

அர்ப்பணம் – படையல்

பாடல்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here