மைக்ரேன் என்னும் ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு இனிப்பான செய்தியாக, ஒரு செயலி அறிமுகமாகியிருக்கிறது. ‘ரிலாக்ஸ் ஏ ஹெட்’ (RELAXaHEAD ) எனும் இந்தச் செயலி, தலைவலியைக் குறைப்பதற்கான வழிகளைப் பரிந்துரைக்கிறது.

தலைவலிக்கு, பலவிதமான சிகிச்சைகள் இருக்கின்றன. மருந்து மாத்திரைகள் தவிர, பழக்க வழக்கம் சார்ந்த சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. குறிப்பிட்ட வகையான தசைகளை மாற்றி மாற்றி அழுத்தத்துக்குள்ளாக்கி, ரிலாக்ஸ் செய்யும் பயிற்சி தலைவலி ஏற்படுவதைக் குறைப்பதாகக் கருதப்படுகிறது.

இந்த எளிய சிகிச்சை முறையை ஸ்மார்ட்போன் வாயிலாகப் பரிந்துரைக்கும் வகையில், ’ரிலாக்ஸ் ஏ ஹெட்’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலியின் பயன்பாடு தொடர்பாக விரிவான ஆய்வு நடத்தப்பட்டு, அது தொடர்பான விவரங்கள் நேச்சர் டிஜிட்டல் மேகசைன் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.

ஒற்றைத் தலைவலி சிகிச்சைக்குப் பழக்க வழக்கம் சார்ந்த பயிற்சிகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டாலும், பெரும்பாலான நோயாளிகள் அவற்றைத் தொடர்வதில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தச் செயலி, தலைவலியை போக்க உதவும் பயிற்சியை மேற்கொள்வதற்கு எளிதாக வழிகாட்டும் எனக் கருதப்படுகிறது.

இந்தச் செயலிக்கான பரிசோதனையில், இது தலைவலி தோன்றுவதை வெகுவாகக் குறைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here