பொ.ஆ.மு.-பொது ஆண்டிற்கு முன்
பொ.ஆ.பி.-பொது ஆண்டிற்கு பின்

பொது ஆண்டு – ஒரு ஆண்டு முறை

ஓர் ஆண்டு என்பது புவி சூரியனை ஒரு முறை சுற்றிவருவதற்கு எடுத்துக்கொள்ளும் காலமாகும். காலம் ஒருவரின் பிறப்பு அல்லது ஒரு நிகழ்வு அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகின்றது. எ.கா. கிறித்துவ ஆண்டு, திருவள்ளுவர் ஆண்டு.

பொது ஆண்டு :

பொது ஆண்டு என்பது கிருஸ்த்துவ ஆண்டு முறையைக் குறிக்கும். இது கிருஸ்த்து பிறப்பிற்கு முன், கிருஸ்த்து பிறப்பிற்குப் பின் என்று இயேசு கிருஸ்த்துவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு வரையறை செய்யப்படுகின்றது. துவக்ககாலத்தில் கிருத்துவர்கள் மட்டும் பயன்படுத்தியிருந்தாலும், தற்போது அனைத்துச் சமயத்தினரும் பயன்படுத்துவதால் பொது ஆண்டு என்று அழைக்கப்படுகின்றது.

கி.மு. = கிருஸ்த்து பிறப்பிற்கு முன் = Before Christ = BC
கி.பி. = கிருஸ்த்து பிறப்பிற்கு பின் = Anne Domini = AD
பொ.ஆ. = பொது ஆண்டு = Common Era = CE
பொ.ஆ.மு. = பொது ஆண்டுக்கு முன் = Before Common Era = BCE
பொ.ஆ.மு.-பொது ஆண்டிற்கு முன் (கி.மு.விற்கு பதிலாக பொ.ஆ.மு -பொது ஆண்டிற்கு முன் என்பது வழங்கப்படுகிறது.)
பொ.ஆ.பி.-பொது ஆண்டிற்குப் பின் (கி.பி.க்கு பதிலாகவும் பயன்படுத்தப்படுகிறது).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here