இளம் அறிவியல் மாணவர் விருது பெற்ற மிரட்டுநிலை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பாராட்டு

புதுக்கோட்டை,ஜீன்.5: இளம் அறிவியல் மாணவர் விருது பெற்ற மிரட்டுநிலை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா நேரில் அழைத்து பாராட்டினார்.

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பத்துறை மற்றும் தமிழக உயர்கல்வித் துறையின் சார்பில் சிவகங்கை மாவட்டம் உளையாத்தங்குடி ஜாஹீர்உசேன் கல்லூரியில் மாணவர்களுக்கான அறிவியல் கருத்தரங்கு மே 13 முதல் 27 வரை 15 நாட்கள் நடைபெற்றது.

இதில் தஞ்சை,புதுக்கோட்டை ,சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இருந்து 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் மிரட்டுநிலை அரசு உயர்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் ர.மெய்யநாதன்,க.கண்ணன்,க.நவீன் அழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இவர்கள் கருத்தரங்கின் இறுதி நாளில் குழுவாக இணைந்து அறிவியல் செய்முறை திட்டத்தை சமர்ப்பித்தார்கள்..இவர்கள் சமர்பித்த செயல்திட்டத்திற்கு முதல் பரிசும் மாணவர்களுக்கு இளம் அறிவியல் மாணவர் விருதும் கிடைத்தது.எனவே விருது பெற்ற மாணவர்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா நேரில் அழைத்துப் பாராட்டினார்.

நிகழ்ச்சியின் போது இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் க.குணசேகரன் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.ராகவன்,அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் ( பொறுப்பு) கு.திராவிடச் செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here