நமது உடல் ஆரோக்கியத்துடன் இருக்க போதுமான ஊட்டச்சத்துகளும் மிகவும் அவசியமாகும்.

இதில் ஒன்று தான் ‘விட்டமின் K’ போன்ற ஊட்டச்சத்துக்கள் நமது உடலுக்கு அத்தியாவசியமானதாகும்

விட்டமின் K எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கிறது, ஆஸ்ட்டியோபோரஸிலிருந்து பாதுகாக்கிறது, இதய ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது.

அந்தவகையில் வைட்டமின் K எந்தெந்த உணவுகளில் அதிகம் உள்ளது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

    பச்சை இலைக் கீரைகளில் அதிகளவு விட்டமின் K காணப்படுகிறது. பாதி கப் கீரையில் 400 மைக்ரோ கிராம் அளவிற்கு விட்டமின் K காணப்படுகிறது. இது ஒரு நாளைக்கு தேவையான விட்டமின் K அளவை விட நான்கு மடங்கு அதிகம்.

    1 கப் கொடி முந்திரியில் 104 மைக்ரோ கிராம் அளவிற்கு விட்டமின் K உள்ளது. இது உங்கள் தினசரி தேவையில் 100% பூர்த்தி செய்கிறது.

    உலர்ந்த துளசியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் மினரல்கள் மட்டும் இல்லை. 45% அளவு விட்டமின் K உள்ளது. ஒரு டீ ஸ்பூன் மட்டும் சாப்பிட்டால் போதும் தினசரி அளவு சரியாகி விடும்.

    கீரைகளில் அதிகளவு விட்டமின் K உள்ளது. ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவை விட 1100% அளவு அதிகமாக காணப்படுகிறது.

    100 கிராம் அவகேடாவில் 21 மைக்ரோகிராம் விட்டமின் K உள்ளது. இது ஒரு நாளைக்கு தேவையான அளவில் 20% அளவை பூர்த்தி செய்கிறது.

    ஒரு வெள்ளரிக்காயில் 60% அளவு ஒரு நாளைக்கு தேவையான விட்டமின் K அளவு உள்ளது.

    முளைக்கட்டிய பயிறு வகைகள் 240% அளவு விட்டமின் K அளவை பூர்த்தி செய்கிறது.

    சிகப்பு தண்டுக்கீரையில் 36 கலோரிகள் மற்றும் 600% விட்டமின் K சத்து உள்ளது. இது ஒரு நாளைக்கு தேவையானதை விட அதிகம் தான்.

எடுத்துக் கொள்ளும் அளவு

இதன் அளவு வயது, பாலினம் இவற்றை பொருத்து வேறுபடுகிறது.

ஒரு நாளைக்கு எவ்வளவு வேண்டுமென்றாலும் விட்டமின் Kயை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். 75 மற்றும் 120 மைக்ரோகிராம் அளவு ஒரு நாளைக்கு போதுமானது.

குறிப்பு

விட்டமின் K சத்தை நீங்கள் மாத்திரை வடிவில் எடுத்து வந்தால் அலர்ஜிக் விளைவு வர வாய்ப்புள்ளது. எனவே உணவு வழியாக இந்த சத்தை பெறுவது நல்லது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here