*பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்*

*04-06-2019*

*திருக்குறள்:-*

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

*விளக்கம் :-*

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

*பழமொழி :-*

Do what you can with that what you have from where you are.

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.

*Article of the day:*-

*India*

The India is the republic country in South Asia. India is bounded by south Indian Ocean, west of the Arabian Sea, the Bay of Bengal on the east, and north of the Himalayas. It shared its bordered country as Pakistan to the west, Bhutan to the north east and Burma (Myanmar) and Bangladesh to the east. Indias Andaman and Nicobar Islands share a maritime border with Thailand and Indonesia.

*இந்தியா*

இந்தியா, தெற்காசியாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்தியப் பெருநிலத்திற்க்கு தெற்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே அரபிக் கடல், கிழக்கே வங்காள விரிகுடா, வடக்கே இமயமலை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் எல்லை நாடுகளாக மேற்கே பாகிஸ்தான், வடக்கே பூட்டான், கிழக்கே வங்காளதேசம், மியான்மர் ஆகியவை அமைந்துள்ளன. இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆனது, தாய்லாந்து, இந்தோனேசியாவின் சுமாத்திரா ஆகியவற்றுடன் அந்தமான் கடலில் கடல் எல்லைகளாகக் கொண்டுள்ளன.

*Today’s birthday:-*

*1.எஸ்.பி.பாலசுப்ரமணியம்*
*2.அனில் அம்பானி*

1. இந்திய திரைப்படப் பாடகர், நடிகர் மற்றும் தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் 1946 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி பிறந்தார். 2. இந்திய தொழிலதிபரான அனில் அம்பானி 1959 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி பிறந்தார்.

*Word of The Day :*

Word:-
*Crisis*-
நெருக்கடி

*Definition:-*
A time of great danger or difficulty; the moment when things change and either improve or get worse.
பெரும் ஆபத்து அல்லது இன்னல் நேரும் வேளை நிலைமை மேம்படுமாறு அல்லது மோசமடையுமாறு மாற்றங்கள் நிகழும் தருணம்.

*Synonyms:-*
Emergency
நெருக்கடி நிலை

*Antonyms:-*
Peace
சமாதானம், அமைதி

*Sentence:-*
A year ago, both companies were in crisis.
ஒரு வருடம் முன்பு, இரண்டு நிறுவனங்களும் நெருக்கடியில் இருந்தது.

*Grammar:-*
Noun
பெயர்ச்சொல்

*நீதிக்கதை*

*எல்லாம் நன்மைக்கே*

 ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அந்நாட்டு அமைச்சர் எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே! என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒரு நாள் இருவரும் பேசிக் கொண்டிருந்தபொழுது அரசன் மாம்பழம் ஒன்றைக் கத்தியால் அறுத்தான். தவறுதலாகக் கத்தி அவனின் சுண்டு விரலை அறுத்துவிட்டது. வலி தாங்க முடியாமல் அரசன் துடித்தான்.

 வழக்கம்போல் அமைச்சர்இ அரசே! எல்லாம் நன்மைக்கே! என்றான். இதைக் கேட்டுக் கோபமடைந்த அரசன்இ நான் விரல் வெட்டுப்பட்டுத் துடிக்கிறேன். எல்லாம் நன்மைக்கே என்று சொல்கிறாய். காவலர்களே! அமைச்சரைச் சிறையில் கொண்டு போய் அடையுங்கள் என்று உத்தரவிட்டான். காவலர்களும் அமைச்சரை சிறையில் அடைத்தனர். அப்போதும் அமைச்சர்இ எல்லாம் நன்மைக்கே! என்றார். நாட்கள் பல கடந்தன.

வேட்டையாடுவதில் ஆர்வமுடைய அரசன் தனியாகக் காட்டிற்குச் சென்றான். அங்கே மலைவாசிகள் காளிக்குப் பலி கொடுப்பதற்காக ஒருவனைத் தேடிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் அரசன் சிக்கிக் கொண்டான்.

 அங்கு வந்த கோவில் பூசாரி அரசனை முழுமையாகச் சோதித்தான். பின்புஇ காளிக்கு எந்தக் குறையுமில்லாதவனை மட்டுமே பலியிட முடியும். இவனோ சுண்டு விரல் பாதியாக உள்ளான். இவனை விட்டு விடுவோம் என்றான். அரசன்! அரண்மனைக்கு வந்ததும் உடனடியாக அமைச்சரை விடுவிக்க உத்தரவிட்டான். நடந்ததை எல்லாம் அமைச்சரிடம் சொன்ன அரசன்இ சுண்டு விரல் வெட்டுப்பட்டதால் உயிர் பிழைத்தேன். அன்று எல்லாம் நன்மைக்கே என்று நீர் சொல்லியதன் உண்மையை அறிந்தேன் என்றான்.

 அரசே என்னைச் நீங்கள் சிறையில் அடைத்ததும் நன்மைக்கே. எப்பொழுதும் உங்களைப் பிரியாமலிருக்கும் நான்இ என்னைச் சிறையிலடைக்காமல் இருந்திருந்தால் உங்களுடன் காட்டிற்கு வந்திருப்பேன். அந்த மலைவாசிகள் எந்தக் குறையும் இல்லாத என்னை அவர்கள் பலியிட்டு இருப்பார்கள். நீங்கள் என்னைச் சிறையில் அடைத்ததால் நான் உயிர் பிழைத்தேன் என்றார் அமைச்சர்.

*நீதி :*
எது நடந்தாலும் நல்லதையே நினைத்துக்கொள்ள வேண்டும்.
*இன்றைய செய்திகள்*

✳நிலம் கையகப்படுத்தியதில் குளறுபடி!’ – 8 வழிச் சாலைக்கு விதித்த தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

✳அசாமில் இருந்து 13 பேருடன் சென்ற இந்திய விமானப் படை விமானம் திடீர் மாயம்

✳இந்திக்கு எதிர்ப்பு: புதிய கல்விக் கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டது.

✳தாங்கள் வர்த்தகப்போரை விரும்பவில்லை என சீனா தனது வெள்ளை அறிக்கையில் தெரிவித்துள்ளது

✳உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து அணி போராடி தோல்வி.

*தொகுப்பு*
🍀🌿🎋☘🎋🍀🍂🎋
T. தென்னரசு,
இ.ஆசிரியர்,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here