ஆந்திரா முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, அம்மாநிலத்தின் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு 7 ஆயிரம் ரூபாய் வரை சம்பளத்தை உயர்த்தி அறிவித்துள்ளார்.

ஐதராபாத்,

ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 175 இடங்களில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 151 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது. இதனையடுத்து விஜயவாடா அருகே இந்திர காந்தி மைதானத்தில் தெலங்கானா மாநிலம் பிரிவினைக்கு பிறகு ஆந்திராவின் 2-வது முதல்-மந்திரியாக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றார்.

இந்நிலையில்,  ஆந்திராவின் இளம் முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நாளுக்கு நாள் மக்களிடையே ஆதரவு குவிந்து வருகிறது. 

ஆட்சிக்கு வந்த சில நாட்களில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.  தனது முதல் உத்தரவாக, அம்மாநில முதியோர் உதவித்தொகையை உயர்த்தி அறிவித்திருந்தார். 

இந்தநிலையில் இன்று ( ஜூன் 3) ஆந்திராவில் நீண்டகாலமாக சம்பள உயர்வு கேட்டு போராடி வந்த அம்மாநிலத்தின் அங்கன்வாடி மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ரூ.3 ஆயிரமாக இருந்த சம்பளத்தை 7 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தி 10 ஆயிரமாக அறிவித்துள்ளார்.  இது அம்மாநில  மக்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here