கிரீன் டீ :

ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்து தேவையற்ற கொழுப்பை குறைத்து, உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது. ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது. இதய நோய் வராமல் தடுக்கிறது.

மாதுளம் பழம் :

மதுளையில் சுண்ணாம்பு சத்து, தாது உப்புக்கள், இரும்புச் சத்து என நோயை எதிர்க்கும் அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. அடிக்கடி மாதுளம் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். புதிய இரத்தம் உண்டாகும். தினமும் மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள், இதய பலகீனம் நிவர்த்தியாகும். இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது.

• கீரைகள் :

கீரைகள் தினமும் எடுத்துக் கொண்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்பார்கள். கீரைகள் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதின் மூலம், இரத்த சோகை வருவதை தடுத்து, நல்ல உடல் நலனை பெறலாம். பெண்களுக்கு 100 கிராம் ஒரு நாளைக்கு, ஆண்களுக்கு 40 கிராம் ஒரு நாளைக்கு, பள்ளி செல்லும் சிறு பிள்ளைகளுக்கு (4-6 வயது) 50 கிராம் ஒரு நாளைக்கு, 10 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் இருபாலருக்கும் 50 கிராம் ஒரு நாளைக்கு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here