அரசுப் பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்கள் மரம் வளர்ப்பதில் தங்களை முழுஈடுபாட்டோடு பயன்படுத்தி கொள்ள வேண்டும்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு

புதுக்கோட்டை,ஜீன்.3: அரசுப்பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்கள் மரம் வளர்ப்பதில் தங்களை முழுஈடுபாட்டோடு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மரம் அறக்கட்டளை சார்பில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற மரம் நடுவிழாவில் பேசினார்.

விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் மரம் அறக் கட்டளை ஆலோசகர் டாக்டர் எட்வின் வரவேற்றுப் பேசினார்.

விழாவில் மரக்கன்றினை நட்டு வைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேசியதாவது: மரக்கன்றுகள் வளர்ப்பது என்பது ஓர் இயற்கையான நிகழ்வு தான் .ஆண்டுதோறும் தலைவர்களின் பிறந்தநாள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் மரங்கள் நடப்படுவது வாடிக்கையாகி விட்டது..ஆனால் நடப்பட்ட மரங்கள் வளர்ந்துள்ளதா என்பது தெரியவில்லை..ஆனால் புதுக்கோட்டை மரம் அறக்கட்டளையினர் நடப்பட்ட மரங்களை முறையாக தண்ணீர் விட்டும்,இயற்கை உரம் இட்டும் ,கூண்டு வைத்தும் பராமரிக்க இருப்பதாகவும்,அதனை பள்ளிகளில் தான் தொடங்க இருப்பதாக கூறினார்கள்..அவர்களின் வேண்டுகோளை ஏற்று இன்று புதுக்கோட்டை,அறந்தாங்கி ,கல்வி மாவட்டத்தில் பசுமைப்படை உள்ள பள்ளிகளில் பள்ளிக்கு 10 முதல் 20 மரக்கன்றுகள் வரை வழங்க உள்ளார்கள்…எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களது பள்ளிகளில் மரங்களை நட்டுப்பராமரிப்பதில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

பின்னர் மரம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் மரம் ராஜா பேசும் போது கூறியதாவது: மரம் அறக்கட்டளையின் நோக்கம் என்பது புதுக்கோட்டை மாவட்டம் முழுமையும் பசுமைக் கோட்டையாக மாற்ற வேண்டும் என்பதே.எங்களது அமைப்பானது 25 பேர் கொண்ட குழுவாக தொடங்கி இன்று அறக்கட்டளையாக மாற்றி உள்ளோம்.மேலும் எங்களது அறக்கட்டளையின் மூலம் நடைபெறும் முதல் நிகழ்ச்சியே புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில் பசுமைப்படை உள்ள அனைத்து பள்ளிகளிலும் மரம் நடுவது தான்.காரணம் மாணவர்கள் மத்தியில் மரம் நட்டு பராமரிக்கும் பழக்கத்தை கொண்டு சென்றோம் என்றால் அவர்கள் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வார்கள் என்றார்.

விழாவில் ஒருங்கிணைந்த மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல்,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ( மேல்நிலை) ஜீவனாந்தம்,முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (உயர்நிலை) கபிலன் மற்றும் மரம் அறக்கட்டளை குழு உறுப்பினர்கள் மரசித்தர் ஞானப்பிரகாசம்,குமிழ் சண்முகசுந்தரம்,மரம் தங ககண்ணன்,ராஜீ,கார்த்திக்,சரவணன்,நேதாஷிகணேஷ்,கார்த்திக் மெஸ் மூர்த்தி,சமூக ஆர்வலர் பாண்டியன்,ஆறுமுகம்,பள்ளிப் பாதுகாப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புதுகை செல்வா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறையினர் ,மரம் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here