குழந்தைகள் உற்சாகமாகப்பள்ளிக்குச் செல்லவேண்டுமா? இந்த 10ஆலோசனைகளைக்கடைப்பிடிங்க பேரண்ட்ஸ்!

பள்ளி திறக்க சிலநாள்களே இருப்பதால்நோட்டுப் புத்தகங்களுக்குஅட்டைப்போடுவதில்தொடங்கி, புத்தகப்பைமற்றும் ஷூ சாக்ஸ்வாங்குவது எனப்பெற்றோர் பிஸியாகஇருப்பார்கள். நீண்டவிடுமுறையில் நேரம்காலம் பார்க்காமல்விளையாட்டு, டூர் எனப்பிள்ளைகள் நினைத்தமாதிரி இருந்திருப்பார்கள்.இந்தச் சூழலில், இப்போதுபள்ளிக்கு அனுப்புவதுபெற்றோருக்குக் கொஞ்சம்சிரமமான டாஸ்க்தான். சிலகுழந்தைகள் அழுதுஅடம்பிடிப்பார்கள்.

  

குழந்தைகள் மகிழ்ச்சியுடன்பள்ளிக்குச் செல்ல,பெற்றோருக்குக்குழந்தைகள் மனநலமருத்துவர் கண்ணன் தரும்10 ஆலோசனைகளைஇங்கு பார்ப்போம்.

 1. குழந்தைகள் பள்ளிசெல்வதில்பெற்றோருக்குத்தான்அதிக பொறுப்புஇருக்கிறது. இரவில்நீண்டநேரம்கண்விழித்திருக்கஅனுமதிக்காமல் சரியானநேரத்துக்குத்தூங்குவதற்குப் பழக்கவேண்டும். இதனால்நிம்மதியாக உறங்கிமறுநாள் காலைஉற்சாகமாகஎழுந்துகொள்வார்கள்.
 2. 2. ‘மிஸ் திட்டுவாங்க…’ `மத்தபிள்ளைகள் சண்டைபோடுவாங்க’ என்பனபோன்ற நெகட்டிவ்வானவிஷயங்கள் பற்றிஅறிவுரை கூறுவதுகுழந்தைகளுக்குஅச்சத்தையும்வெறுப்பையும் ஏற்படுத்தும்.மாறாக, ‘உங்க ப்ரண்ட்ஸைமீட் பண்ணலாம்’, ‘மிஸ் புதுசுபுதுசா நிறைய விஷயங்கள்சொல்லித் தருவாங்க…’என்று பாசிட்டிவாகப்பேசலாம். முதல்தடவைபள்ளி செல்லும்குழந்தைகளாக இருந்தால், `உங்க மிஸ் ரொம்பநல்லவங்க’, `ஸ்கூல்ல நல்லஃப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்க,அங்கே விளையாடலாம்’என்று பாசிட்டிவாகப் பேசிஅவர்களைத்தயார்படுத்துங்கள்.
 3. புத்தகப்பை, வாட்டர்பாட்டில், டிபன் பாக்ஸ்மற்றும் ஸ்நாக்ஸ் பாக்ஸ்ஆகியவற்றை,குழந்தைகளை அழைத்துச்சென்று அவர்கள்விருப்பத்தின்படிவாங்கிக்கொடுங்கள். இதுபள்ளிக்குச் செல்லும்ஆர்வத்தைக்குழந்தைகளிடம்உண்டாக்கும்.
 4.  குழந்தைகளுக்குப் பிடித்தஉணவுகளைச் செய்துகொடுப்பது நல்லது.காலையில் ஒரு உணவு,மதியம் வேறு உணவாகஇருப்பது அவர்களுக்குச்சாப்பாட்டின்மீது ஆர்வத்தைஉண்டாக்கும்.குறைந்தபட்சம் பள்ளிதொடங்கும் முதல் வாரம்மட்டுமாவது பெற்றோர்இதைப் பின்பற்றவேண்டும்.
 5. பள்ளி செல்லும்போதுகுழந்தைகளிடம் இரண்டுடிபன் பாக்ஸ்களைகொடுத்தனுப்பலாம்.ஒன்றில் சாப்பிடும்உணவையும் மற்றொன்றில்ஹெல்த்தி ஸ்நாக்ஸ்அல்லது நறுக்கியபழங்களை வைத்தும்அனுப்பலாம்.

  1. ஆரம்பகாலங்களில்குழந்தைகளைக்கிளப்புவதற்கெனதனியாகநேரம் ஒதுக்க வேண்டும்.உடன் குளிப்பது, பல்துலக்குவது எனக்குழந்தைகளுடன் நேரம்செலவிட வேண்டும். சிறிதுநாள்களுக்குப் பிறகு, ‘நீங்களே செய்யுங்கள்…’எனக் குழந்தைகளைஉற்சாகப்படுத்தி,காலையில் எழுந்ததும்காலைக்கடன்களை முடிக்கபழக்க வேண்டும்.
  2. பள்ளியைவிட்டு வீடுதிரும்பியதும் பள்ளியில்நடந்த நிகழ்வுகளைப்பற்றிக் கேட்க வேண்டும்.முக்கியமாக, `ஆசிரியர்என்ன சொல்லிகொடுத்தார்?’ என்றுகுழந்தையிடம் தினமும்கேளுங்கள். அதோடுகுழந்தைகள் செய்யும்சின்னச் சின்னவிஷயங்களையும் பாராட்டிஊக்குவிக்க வேண்டும்.

   1. குழந்தைகள்பயன்படுத்தும்நோட்டு,புத்தகங்களுக்குவிதவிதமான நிறங்களில்அட்டை போட்டுக்கொடுப்பது, கார்ட்டூன் படம்உள்ள லேபிள்களை ஒட்டிக்கொடுப்பது அவர்களுக்குமகிழ்ச்சி தருவதோடுபடிப்பில் ஆர்வத்தைஉண்டாக்கும்.
   2. குழந்தையைப்பள்ளிக்குஅனுப்புவதற்கு முன் முத்தம்கொடுப்பது,அணைத்துக்கொள்வது,டாட்டா காட்டுவது என்றுஅவர்களைக் கனிவோடுவழியனுப்பி வையுங்கள்.பள்ளியிலிருந்து வந்ததும்அவர்களைக்கட்டியணைத்து முத்தம்கொடுங்கள். இதுஅவர்களுக்கு பாதுகாப்புஉணர்வை ஏற்படுத்தும்;மேலும் உங்களுக்கும்உங்கள் குழந்தைக்குமானஉறவை வலுப்படுத்தும்;
   3. ஏன் பள்ளி செல்லவேண்டும்?’ என்பது போன்றகேள்விகளை, குழந்தைகள்கேட்கும்போது,அவர்களுக்குப் புரியும்வகையில் தெளிவாகஎடுத்துச் சொல்லவேண்டும். அந்தக்காலத்தில் பள்ளிப்பருவத்தை நீங்கள் எப்படிமகிழ்ச்சியாகக் கழித்தீர்கள்என்பதைச் சொல்லிஅவர்களுக்கு நேர்மறைஎண்ணத்தைஏற்படுத்துங்கள். இதுமகிழ்ச்சியாக பள்ளி செல்லஉதவும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here