அறிக்கை
01.06.2019

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அந்தந்த மாநில மக்களின் எண்ண ஓட்டத்தை அறிந்து செயல்படுத்த வேண்டும் மூன்றாவது மொழியாக இந்தி மொழியை திணிக்கக் கூடாது மத்திய அரசிற்கு வேண்டுகோள்

தமிழ்நாடு அரசு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சா.அருணன் அறிக்கை
================


தற்போது நடைமுறையில் உள்ள தேசிய கல்வி கொள்கையானது 1986 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டு, 1992 ஆம் ஆண்டு பலக்கட்ட போராட்டத்திற்கு பிறகு திருத்தப்பட்டது. 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது புதிய கல்விக் கொள்கை கொண்டுவரப்படும் என்று பாஜக வாக்குறுதி கொடுத்திருந்தது, அதன்படி 2016 ஆம் ஆண்டு டி.எஸ்.சுப்பிரமணியம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.அக்குழு பரிந்துரைத்ததிலும் பல குளறுபடிகள். பிறகு கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 9 பேர் கொண்ட நிபுணர்கள் குழு, அமைக்கப் பட்டது.

அந்த குழு, தேசிய கல்வி கொள்கைக்கான வரைவை, புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மத்திய மனித வளம் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போகிரியால் அவர்களிடம் நேற்று (31.05.2019) வழங்கப்பட்டது.

புதிய வரைவில் மும்மொழி கொள்கை அடிப்படையில் மாநிலங்களை, இந்தி மொழி பேசும் மாநிலங்கள், பேசாத மாநிலங்கள் என இருவகையாகப் பிரித்துள்ளனர். இந்தி பேசாத மாநிலங்களில், அந்த மாநில தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றோடு இந்தி மொழியை கற்பிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை தாய்மொழியான தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருமொழிக்கொள்கை கடைப்பிடித்து வருகிறது.இருமொழிக்கொள்கைக்கு பாதிப்பு வராமலும் தேசியகல்விக்கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டும்.மேலும்
புதிய கல்விக் கொள்கையில் பள்ளிக்கல்வித்துறை பொறுத்தவரை

முதலாம் நிலை
—————————-
முன்பருவக்கல்வி முதலாம் வகுப்பு முதல் 2 ஆம் வகுப்பு வரை

இரண்டாம் நிலை
————————-
3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை

மூன்றாம் நிலை
——————————
6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை

நான்காம் நிலை
—————————-
9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை

9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பருவத்தேர்வு முறை ஆண்டுக்கு 2 தேர்வுகள் அறிமுகம் எந்த அளவிற்கு சாத்தியமாகும் என்று தெரியவில்லை,
பருவத்தேர்வுபப்பற்றியும் விளக்கமாக குறிப்பிடபட வில்லை
இந்த புதியக்கல்வி கொள்கைக்கான வரைவு அறிக்கை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.கருத்துக்களை தெளிவாகக் குறிப்பிட அந்தந்த தாய்மொழியில் வரைவு அறிக்கை இருந்தால் மட்டுமே புரிந்துக் கொள்ள முடியும்

அந்தந்த மாநில தாய்மொழியில் அறிக்கையை வெளியிடவேண்டும்.

அப்போதுதான் புதியக்கல்விக்கொள்கை என்னவென்று தெரியும்,

வரைவு அறிக்கைக் குறித்து பொதுமக்கள் கருத்துக்களை பதிவு செய்திட ஜூன் 30 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்பதை மத்திய அரசு மறு பரிசீலனை செய்து மேலும் கால நீட்டிப்பு வழங்கிடவும் அந்தந்த மாநில மொழிகளில் அறிக்கை தயாரித்து வழங்க வேண்டும்

இந்தி மொழியை விரும்பாத மாநில மக்களின் கருத்தை கேட்டறிந்து,கேட்டறிந்தபின் ஆட்சேபனை இருக்கும் பட்சத்தில் அந்தந்த மாநிலத்தில் ஏற்கனவே இருக்கும் இருமொழி (தாய்மொழி மற்றும் ஆங்கிலம்)கொள்கையை தொடர நடவடிக்கை எடுக்க மத்திய அரசை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டிக் கேட்டுக் கேட்டுக்கொள்கிறேன்

சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here