கோடைக்காலத்தில் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை அதிகம் கிடைக்கும்.  மாம்பழம், லிச்சி, நாவற்பழம் மற்றும் பீச்சஸ் போன்ற பழங்கள் கோடைக்காலத்தில் மட்டுமே அதிகம் கிடைக்கும்.  அந்தந்த பருவக்காலத்திற்கு ஏற்ற பழங்களை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.  சாலட், ஸ்மூத்தீஸ் மற்றும் மில்க்‌ ஷேக்ஸ் கோடைக்காலத்திற்கு ஏற்றது.  இவற்றில் ஆண்டிஆக்ஸிடண்ட், வைட்டமின் மற்றும் தாதுக்கள் அடங்கியிருக்கிறது.  இரத்த அழுத்தத்தை குறைக்க இந்த பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வரலாம்.  உடலில் அளவிற்கு அதிகமாக சோடியம் சேரும்போது, இரத்த நாளங்களில் அழுத்தம் அதிகரிக்கும்.  இதனை சரிசெய்ய பொட்டாசியம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.  தர்பூசணி, முலாம்பழம் மற்றும் தேன் முலாம்பழம் போன்றவற்றை சாப்பிட்டு இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்.  

தர்பூசணி:

தர்பூசணியில் 94 சதவிகிதம் நீர்ச்சத்து இருக்கிறது.  இதில் வைட்டமின் சி மற்றும் ஊட்டச்சத்துக்களும் அதிகம் இருக்கிறது.  பொட்டாசியம் நிறைந்திருக்கும் தர்பூசணியை சாப்பிடுவதால் உடலில் இரத்த அழுத்தம் குறையும். 

cfd297ig

முலாம்பழம்:

முலாம்பழத்தில் உள்ள விதைகளில் கூட ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.  நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்த இந்த பழம் செரிமானத்திற்கு சிறந்தது.  சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.  சாலட், ஸ்மூத்தீ அல்லதி மில்க் ஷேக்காக செய்து குடிக்கலாம்.  நீரிழிவு நோயாளிகள் என்றால், சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது.  

muskmelon

 

தேன் முலாம்பழம்:

முலாம்பழத்திலே, இந்த தேன் முலாம்பழம் ஒரு வகை.  இதில் இயற்கையாகவே, இனிப்பு சுவை, வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் அதிகம்.  இதனை சர்க்கரை சேர்க்காமல் அப்படியே சாப்பிடலாம்.  இரத்த அழுத்தம் குறைக்கவும், கோடை வெப்பத்தில் இருந்து தப்பவும் இந்த பழச்சாறு அருந்தலாம்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here