🔬📽📡🧬⏳🔭📹📹📺🔭🔦

*தினம் ஒரு அறிவியல்*

🚭🚭🚭🚭🚭🚭
*புகையிலை*
🚭🚭🚭🚭🚭🚭
*புகை பிடித்தலை தவிர்ப்போம் புகை நுகர்வதை தவிர்ப்போம்*

*உலக சுகாதார நிறுவனத்தால் ஒவ்வொரு ஆண்டும் உலக புகையிலை ஒழிப்பு தினம் மே மாதம் 31 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது*.

புகையிலை ஒரு வேளாண்மை உற்பத்திப் பொருள். இதனைப் புகைத்தலுக்கு அல்லது புகையிலை பிடித்தலுக்குப் பயன்படுத்துவதனால் இது புகையிலை என்னும் காரணப்பெயரைப் பெற்றது.

இதனைப் புகைத்துப் பழக்கப்பட்டவர்கள் அப் பழக்கத்துக்கே அடிமையாகி விடுவர். *புகையிலை, நிக்கொட்டீனா என்னும் பேரினத்தைச் சேர்ந்தது*.

பருத்தி அறிமுகப்படுத்தப்படும் வரை பணப்பயிராக இதன் முதன்மைத்துவம் நீடித்தது.

புகையிலை ஆண்டுக்கொருமுறை சாகுபடி செய்யப்படும் பூண்டுத்தாவரம் பணப்பயிர் ஆகும்.

சொலனேசி குடும்பத்தைச் சேர்ந்த நிக்கோடியானா பேரினத்தைக் கொண்ட இப்புகையிலையில் பல சிற்றினங்கள் உள்ளன.

நிகோட்டினாத் தாவரத்தின் ஆல்கலாய்டுகள் போதையை ஏற்படுத்தி அடிமையாக்க வல்லன.
மேலும் பூச்சிகளின் நரம்பு நச்சாகவும் செயல்படுகிறது.

புகையிலையின் உலர்ந்த நிலையில் 0.6% முதல் 3.0% நிக்கோடின் உள்ளது.

நிக்கோடின் அசிட்டைல் கொலைன் ரிசப்டார்களில்(nAChRs), அதன் இரு துணை மூலக்கூறுகளைத் (nAChRα9 and nAChRα10) தவிர நிகோட்டின் புகுவாய்களில் (ரிசப்டார்களில்) முதன்மை இயக்கியாக (அகோனிஸ்ட்) செயல்படுகிறது.

இவைகளே மூளையுடன் தொடர்பு கொண்டு புகையிலை அடிமைத்தனத்திற்கு காரணமாகின்றன.

புகையிலையை நுகர்ந்தவுடன் அது நிக்கோட்டின் மூலக்கூறாக இரத்த ஓட்டத்தில் கலந்து 10-20 நொடிகளில் மூளையை அடைகிறது.

இப்போதை சில நொடிகளே மதிமயக்கச் செய்து அதனை நுகரத் தூண்டுகிறது

ஒரு சிகரட் புகைக்கப்படும் போது தோராயமாக ஒருவர் தன் ஆயுட்காலத்தின் 11 நிமிடங்களை இழக்கின்றார்.

ஒவ்வொரு 6 நொடிப்பொழுதிலும் உலகில் ஒரு உயிரழப்பு புகையிலையால் ஏற்படுகிறது.

புகைப்பழக்கம் உடையவர்கள் இயல்பான இறப்பு விகிதத்தைக் காட்டிலும் 60-80% அதிகம்.

ஒருவருடத்திற்கு சுமார்‌ 5 மில்லியன் மக்கள் புகையிலை சார்ந்த நோயால் மடிகின்றனர்.

இந்திய புகையிலைக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுகாதார விழிப்புணர்விற்காக,

திரைப்படங்களில் புகைப்பிடித்தல் பற்றிய விழிப்புணர்வு காட்சிகள் தலையங்கம், இடைவேளை, இறுதி போன்றவற்றில் இடம்பெறச் செய்தல் வேண்டும்.

திரைப்படங்களில் புகைப்பிடித்தல் காட்சிகள் வரும்போது “புகைப்பிடித்தல் கேடு தரும்” உள்ளிட்ட வாசகங்கள் ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளில் இடம் பெறல் வேண்டும்

🌈📡🔬🛶⏳☂️🔭♻️
*இரா.கோபிநாத்*
இடைநிலை ஆசிரியர்
9578141313
*கடம்பத்தூர் ஒன்றியம்*
*திருவள்ளூர் மாவட்டம்*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here